உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போர் நிறுத்தம் ஏற்பட்டாலும் பயங்கரவாதத்திற்கு எதிரான கொள்கையில் மாற்றமில்லை: ஜெய்சங்கர்

போர் நிறுத்தம் ஏற்பட்டாலும் பயங்கரவாதத்திற்கு எதிரான கொள்கையில் மாற்றமில்லை: ஜெய்சங்கர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டாலும், பயங்கரவாதத்திற்கு எதிரான நமது உறுதியான மற்றும் சமரசமில்லாத கொள்கை தொடரும்,'' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் இன்று மே 10ம் தேதி மாலை 5 மணி முதல் போர் நிறுத்தம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளன. இரு நாடுகளின் ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தையை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=dwaqup3p&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதனைத் தொடர்ந்து மத்திய வெளியுறவுத்துறை செயலர் ஜெய்சங்கர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்தியாவும், பாகிஸ்தானும், இரு நாடுகளுக்கு இடையே நடந்து வரும் துப்பாக்கிச்சூடு மற்றும் ராணுவ நடவடிக்கையை நிறுத்துவதற்காக பரஸ்பரம் ஒரு ஒப்பந்தத்தை போட்டு உள்ளன. அனைத்து வடிவிலும் பயங்கரவாதம் மற்றும் அதன் செயல்பாடுகளுக்கு எதிராக உறுதியான மற்றும் சமரசம் இல்லாத கொள்கையை இந்தியா கடைபிடித்து வருகிறது. அது எதிர்காலத்திலும் தொடரும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

பல்லவி
மே 10, 2025 23:43

பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டிப்பாக எதிராக நடவடிக்கை தேவை அதில் தயக்கம் காட்ட வேண்டாம்.


Barakat Ali
மே 10, 2025 22:23

சரியான முடிவு ........


Veeraputhiran Balasubramoniam
மே 10, 2025 20:31

காலாவதி ஆக்கப்பட்ட ஒப்பந்தம் நேரு குடும்ப ஒப்பந்தம் மீண்டும் செயலுக்கு வரக்கூடாது... நவீன வளர்ந்த இந்தியாவின் மோடிஜி இன் தேச நலன் ஒப்பந்தம் இனி ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கும் விதத்தில் உருவாகப்பட்டு "பத்து கட்டளை" புதிய ஒப்பந்தம் உருவாக்கப்பட்டு அதில் கையெழுத்து இடும் தகுதி மட்டுமே அதில் எந்த திருத்தமும் செய்யாமல் கொடுத்து உருவாக்கப்பட வேண்டும்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை