உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வெவ்வேறு மொழிகள் பேசினாலும் தர்மமே நாட்டை ஒன்றுபடுத்துகிறது: துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன்

வெவ்வேறு மொழிகள் பேசினாலும் தர்மமே நாட்டை ஒன்றுபடுத்துகிறது: துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: “நம் நாட்டில் மக்கள் வெவ்வேறு மொழிகள் பேசினாலும் , தர்மம் ஒன்றே தேசத்தை ஒன்றிணைக்கும் ஒரு பொதுவான சக்தியாக செயல்பட்டு, ஒற்றுமை மற்றும் சமூக நல்லிணக்கத்தை வளர்க்கிறது,” என, துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மத்திய கலாசார அமைச்சகம் மற்றும் சாகித்ய அகாடமி சார்பில் 'உன்மேஷா - சர்வதேச இலக்கிய திருவிழா', பீஹாரின் பாட்னாவில் கடந்த 25ம் தேதி துவங்கியது. ஆசியாவின் மிகப்பெரிய இலக்கிய திருவிழாவான இதில், 15 நாடுகளில் இருந்து ஏராளமான கவிஞர்கள், இலக்கியவாதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதன் நிறைவு விழா நேற்று நடந்தது. துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், பீஹார் கவர்னர் ஆரிப் முகமது கான், பீஹார் துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் சி.பி. ராதாகிருஷ்ணன் பேசியதாவது: சமீபத்தில், ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்த ஒருவர், 'பொதுவாக ஒரு மொழி இல்லாவிட்டாலும், இந்தியா எப்படி ஒற்றுமையாக இருக்கிறது' என, கேட்டார். இந்திய மக்கள் வெவ்வேறு மொழிகள் பேசினாலும், அவர்கள் தர்மத்தின் கருத்து வாயிலாக ஒற்றுமையாக இருக்கிறார்கள் என பதிலளித்தேன்; உண்மையும் அதுதான். நம் நாட்டில் தர்மம் ஒன்றே தேசத்தை ஒன்றிணைக்கும் ஒரு பொதுவான சக்தியாக செயல்பட்டு, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை வளர்க்கிறது. 2,500 ஆண்டுகளுக்கு முன்பு, பீஹாரில் சக்திவாய்ந்த மவுரிய பேரரசு ஆட்சி செய்தது. அடுத்து, பண்டைய குடியரசாகிய வைஷாலியின் பிறப்பிடமாகவும் மாறியது. புத்தர் மற்றும் மஹாவீரர் ஏற்படுத்திய ஆன்மிக மறுமலர்ச்சியை கண்ட இம்மாநிலம், வளமான கலாசார பாரம்பரியத்தை உள்ளடக்கியுள்ளது. மதுபானி ஓவியங்கள், சாத் திருவிழா போன்றவை மாநில நாட்டுப்புற கலாசாரத்துக்கு சான்றாக உள்ளன. இவை அனைத்தும், இலக்கியத்தின் வளர்ச்சியாலேயே சாத்தியமானது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Rathna
செப் 29, 2025 11:56

அந்த ஹிந்து தர்மத்தை அழிக்கத்தான், தசரா உங்களுடையது இல்லை. கோவில் வழிமுறையை நீங்கள் தீர்மானிக்க முடியாது, ஐயப்பனை நீங்கள் கொண்டாட முடியாது, உங்கள் தர்மம் வழி முறைகளை, இறைவன் மேல் நம்பிக்கை இல்லாத நாங்கள் தான் தீர்மானிப்போம். உங்கள் கோவிலை, ஐரோப்பா, அரேபிய ஸ்டைலில் அமைத்து உங்களை கேலி செய்வோம், ஹிந்து என்று ஒரு மதமே கிடையாது என்று பிரதான எதிர்க்கட்சியில் இருந்து பல கூமுட்டைகளும் கூவுகிறார்கள்.


Priyan Vadanad
செப் 29, 2025 08:14

பெருமதிப்புக்குரிய துணை ஜனாதிபதி சி பி ராதாகிருஷ்ணன் தமிழராக இருப்பதால் தமிழ் தர்மப்படி பேசுகிறார். நன்றிகள்.


Priyan Vadanad
செப் 29, 2025 08:11

வெவ்வேறு மொழிகள் பேசினாலும் இந்தி நாட்டை ஒன்றுபடுத்துகிறது என்று சொல்லி பிளவு விதையை இன்னும் ஆழமாக விதைத்திருப்பார்


vivek
செப் 29, 2025 09:27

திராவிடர்களுக்கு மூளை வளர்ச்சி கம்மிதான்


Ramesh Sargam
செப் 29, 2025 01:13

தர்மம் நாட்டை ஒன்றுபடுத்துகிறது. சந்தேகமே இல்லை. ஆனால் அரசியல்வாதிகள் அதை பிளவுபடுத்துகிறார்கள். அப்பேர்ப்பட்ட அரசியல்வாதிகள் ஒழியவேண்டும். நாடு ஒற்றுமையுடன் இருக்கவேண்டும்.


Thravisham
செப் 29, 2025 06:42

குறிப்பாக பப்பு கும்பல் & திருட்டு த்ரவிஷ குரூப்


முக்கிய வீடியோ