உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அனைவருக்குமான பொருளாதாரம் தேவை: கேட்கிறார் ராகுல்

அனைவருக்குமான பொருளாதாரம் தேவை: கேட்கிறார் ராகுல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தேர்வு செய்யப்பட்ட ஒரு சில முதலாளிகளுக்கு மட்டும் அல்லாமல், அனைத்து இந்தியர்களுக்கும் வேலை செய்யும் பொருளாதாரமே தேவை என லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த ஆண்டு, டூவிலர் விற்பனை 17 சதவீதமும், கார் விற்பனை 8.6 சதவீதமும் குறைந்துள்ளது. அதேநேரத்தில் மொபைல் சந்தையும் 7 சதவீதம் குறைந்துள்ளது.மறுபுறம், செலவும், கடன் ஆகிய இரண்டும் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. வீட்டு வாடகை, வீட்டு பொருட்களுக்கான பணவீக்கம், கல்விச்செலவு என அனைத்தும் செலவு மிக்கதாக மாறி உள்ளது.இவை அனைத்தும் சாதாரண எண் அல்ல. இவை அனைத்தும ஒவ்வொரு சாமானிய இந்தியர்களையும் நொறுங்கச் செய்யும் பொருளாதாரத்தின் உண்மையான நிலை.ஒருவர் கேட்கும் சரியான கேள்வியின் சூழ்நிலையை புரிந்து கொண்டு, பொறுப்புடன் பதிலளிக்கும் அரசியலே நமக்கு தேவை. ஒரு சிலருக்காக மட்டும் அல்லாமல் அனைத்து இந்தியர்களுக்காகவும் பணியாற்றும் பொருளாதாரமே நமது தேவை. இவ்வாறு அந்த அறிக்கையில் ராகுல் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை