உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாஜி முதல்வர் பூபேஷ் பாகலுக்கு குறி: சத்தீஸ்கரில் 15 இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு

மாஜி முதல்வர் பூபேஷ் பாகலுக்கு குறி: சத்தீஸ்கரில் 15 இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் 15க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மாஜி முதல்வர் பூபேஷ் பாகல் வீட்டிலும் சோதனை நடந்தது.மதுபான கொள்கை விவகாரத்தில் சத்தீஸ்கர் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பூபேஷ் பாகலின் மகன் சைதன்யா பாகல் மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.இந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் மூலம் அரசுக்கு ரூ.2100 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்று (மார்ச் 10) சத்தீஸ்கரில் 15க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மாஜி முதல்வர் பூபேஷ் பாகல் வீட்டிலும் சோதனை நடந்தது.இது குறித்து, சமூக வலைதளத்தில் பூபேஷ் பாகல் கூறியிருப்பதாவது: கடந்த 7 ஆண்டுகளாக தொடர்ந்து வரும் இந்த பொய் வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இன்று முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகல் வீட்டிற்குள் நுழைந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். இந்த சதித்திட்டம் மூலம் பஞ்சாப் தேர்தலில் காங்கிரஸை தடுக்க முடியும் என்று யாராவது நினைத்தால், அது தவறான திட்டம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Srinivasan Krishnamoorthi
மார் 10, 2025 12:55

ED Raids seize money documents of land, confiscate valuable items not conforming to know income, involving money laundering. Cases filed. But money valuables etc are remitted to Government treasuries, Not returned. A good move. But cases never end. Implicated persons roam around


ராமகிருஷ்ணன்
மார் 10, 2025 12:54

மதுபான ஊழல்கள், சத்தீஸ்கர் மாநிலத்தில் 2100 கோடிகள், டெல்லியில் 2000 கோடிகள், தமிழகத்தில் 100000 கோடிகள். நம்பர் ஓன் முதல்வர் நம்ம முதல்வர். எவ்வளவு பெருமையாக இருக்கிறது, அயராது முட்டு கொடுக்குற ஊபிஸ்களுக்கு 200 ரூபாயில் இருந்து 300 ரூபாய் தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.


Ramesh Sargam
மார் 10, 2025 12:32

அமலாக்கத்துறை ரெய்டு ரெய்டு என்று தினம் தினம் செய்தி வந்த வண்ணம் இருக்கின்றது.


Barakat Ali
மார் 10, 2025 12:19

பாஜகவுக்கு நிதி கொடுத்துட்டு தப்பிச்சுருங்க... சோனியா, ராகுல் இவங்கள்லாம் டென்ஷன் இல்லாம நடமாட்றாங்கள்ல ????


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை