உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போலி என்கவுன்டர் வழக்கில் சிக்கிய முன்னாள் மாடல் அழகி சுட்டுக்கொலை

போலி என்கவுன்டர் வழக்கில் சிக்கிய முன்னாள் மாடல் அழகி சுட்டுக்கொலை

குருகிராம், போலி 'என்கவுன்டர்' வழக்கில் சிறை சென்று ஜாமினில் வந்த, முன்னாள் மாடல் அழகி திவ்யா பஹுஜா, 27, ஹரியானா ஹோட்டல் ஒன்றில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானாவின் குருகிராமில் வசித்து வந்த பிரபல தாதா சந்தீப் கடோலி, கடந்த 2016ல் மஹாராஷ்டிராவின் மும்பையில் போலி என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

கைது

அவரது காதலியும், மாடல் அழகியுமான திவ்யா பஹுஜாவின் உதவியால் இந்த போலி என்கவுன்டர் நடந்தது தெரியவந்தது. இதையடுத்து, இதில் தொடர்புடைய போலீசார் கைது செய்யப்பட்டனர். மாடல் அழகி திவ்யாவும் கைது செய்யப்பட்டு மும்பை சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு மும்பை உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியதை அடுத்து, ஏழு ஆண்டுகளுக்குப் பின் கடந்த ஜூனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், கடந்த 2ம் தேதி முதல் அவரை காணவில்லை என திவ்யா குடும்பத்தினர், குருகிராம் போலீசாரிடம் புகார் அளித்தனர்.இதையடுத்து நடந்த தேடுதல் வேட்டையில், குருகிராமில் உள்ள ஹோட்டல் ஒன்றில் திவ்யா நேற்று முன்தினம் சடலமாக மீட்கப்பட்டார். விசாரணையில், அவர் சுட்டுக் கொல்லப்பட்டது தெரியவந்தது. இது குறித்து போலீசார் கூறியதாவது:சிறையில் இருந்து வந்த திவ்யாவுக்கு ஹோட்டல் உரிமையாளர் அபிஜித் சிங் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவருடன் நெருக்கமாக இருந்த நிலையில், அந்த புகைப்படங்களை காட்டி பணம் கேட்டு, திவ்யா மிரட்டியுள்ளார். இது தொடர்பாக நடந்த மோதலில், திவ்யாவை அபிஜித் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.அவரது உடலை ஹோட்டல் ஊழியர்கள் ஹேம்ராஜ், ஓம்பிரகாஷ் ஆகியோருடன் சேர்ந்து அப்புறப்படுத்த முயன்றார்.

குற்றச்சாட்டு

அப்போது போலீசில் அவர்கள் சிக்கியதை அடுத்து, மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மேலும் சிலரை தேடி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர். இதற்கிடையே, பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படும் குற்றச்சாட்டை திவ்யா குடும்பத்தினர் மறுத்துள்ளனர். ஏழு ஆண்டுகளுக்கு முன் இறந்த ரவுடி சந்தீப்பின் சகோதரன் பிராம் பிரகாஷ், சகோதரி சுதேஷ் ஆகியோரின் உத்தரவின் அடிப்படையில், கூலிப்படையாக செயல்பட்ட அபிஜித், திவ்யாவை சுட்டுக் கொன்றதாக அவர்கள் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். இது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

ram
ஜன 05, 2024 10:48

இங்கு காஞ்சிபுரம் அருகில் இரண்டு நபர்களை என்கௌண்ட்டர் செய்து இருக்குது இந்த திருட்டு திமுக அரசு, இதை பத்தி பேசுங்க திமுக கொத்தடிமைகளே.


ஜெய்ஹிந்த்புரம்
ஜன 05, 2024 01:49

குஜராத் மாடல் என்கவுண்டர். கனடா, அமேரிக்கா வரைக்கும் பிரசித்தம். இப்பொழுது டில்லியில்.


Senthoora
ஜன 05, 2024 05:26

ஐயா நான் அவனில்லை, நான் அவனில்லை, நான் அவனில்லை. இப்படிக்கு சங்கிகள் சங்கம்.


RAMAKRISHNAN NATESAN
ஜன 05, 2024 08:12

நாட்டிலேயே அதிக என்கவுன்ட்டர் நடைபெற்றது உ பி யில் மட்டுமே ...... அதுவும் யோகி ஆத்யநாத் பதவிக்கு வரும் முன்பே அந்தப் பெயரைப் பெற்றது உ பி ...... சீக்கு மூளை களுக்கு இந்த உண்மை புரியவே புரியாது .... குஜராத்தில் தன்னைப்போட்டுத்தள்ள வந்தவர்களை முந்திக்கொண்டு தானே போட்டுத்தள்ளினார் ..... அதாவது ஒருவித களையெடுப்பு ...... அது தொடரக்கூடாது என்றால் அது மூர்க்கத்தின் கையில்தான் உள்ளது .....


மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை