உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிறப்பான சுதேசி சமூக வலைதளம்: ஸ்ரீதர் வேம்பு உறுதி

சிறப்பான சுதேசி சமூக வலைதளம்: ஸ்ரீதர் வேம்பு உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: உலகின் சிறந்த செய்தி சமூக வலைதள அனுபவத்தை ' அரட்டை' செயலி மூலம் வழங்க உறுதிபூண்டுள்ளோம் என அந்த ஸோகோ நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார்.சமூக வலைதளங்களில் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டுவிட்டர், த்ரெட்ஸ், வாட்ஸ்அப், ஸ்நாப்சாட், யூடியூப் உள்ளிட்டவை உலகளவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்தியாவிலும் கோடிக்கணக்கானோர் இந்த செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். இதனிடையே உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட சமூக வலைதளம் வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்தனர். சுதேசி பொருட்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என மத்திய அரசும் கோரிக்கை விடுத்தது. இந்திய தயாரிப்புகளை ஊக்குவிக்கும் விதமாக, டாக்குமெண்ட்ஸ், ஸ்ப்ரெட்ஷீட்ஸ் மற்றும் பிரசன்டேஷன் தயாரிக்க மைக்ரோசாப்டுக்கு பதிலாக இந்திய தளமான ஸோஹோவுக்கு மாறியதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்தார்.இந்நிலையில் ' மேட் இன் இந்தியா' தயாரிப்பாக ஸோஹோ நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு அறிமுகப்படுத்திய 'அரட்டை ' செயலியை பயன்படுத்தலாம் என்று நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த செயலி தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருவதாலும், பல புதிய அம்சங்கள் காரணமாகவும் அது இந்திய பயனர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. முக்கிய பிரபலங்கள் இந்த செயலியை பயன்படுத்த துவங்கி உள்ளனர்.மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்ட அறிக்கையில், ஸோஹோ நிறுவனம் உருவாக்கிய அரட்டை செயலி இலவசம். பயன்படுத்த எளிதாக உள்ளது. பாதுகாப்பாக இருப்பதுடன் மேட் இன் இந்தியா தயாரிப்பாக இருக்கிறது. சுதேசியை ஏற்க வேண்டும் என்ற பிரதமர் மோடியின் வழிநடத்துதலின்படி, அனைவரும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட செயலியில் இணைந்து குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும் எனத் தெரிவித்து இருந்தார்.இந்நிலையில் ஸோகோ நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:இது எங்கள் பொறுமையான பொறியியல் அணுகுமுறையின் மற்றொரு எடுத்துக்காட்டு. குறைந்த விலை மொபைல்போன்கள், குறைந்த அலைவரிசை நெட்வொர்க்குகள், சிறந்த தனியுரிமை மற்றும் பாதுகாப்பை வழங்குவதாலும், அதே நேரத்தில் பயன்படுத்த மிகவும் எளிதாக இருக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் நேரத்தை எடுத்துக் கொண்டோம். வாரந்தோறும் செயலியை விடாமுயற்சியுடன் புதுப்பித்து வருகிறோம். நீங்கள் எதிர்பார்க்கும் பல அம்சங்களுக்காக நாங்கள் பணியாற்றி வருகிறோம், இன்னும் ஒரு மாதத்தில், அதில் நிறைய விஷயங்கள் செய்யப்படும். உள்கட்டமைப்பிலும் நாங்கள் முதலீடு செய்கிறோம். இவை அனைத்தையும் பற்றி நான் தினமும் பொறியாளர்களிடம் தனிப்பட்ட முறையில் பேசி வருகிறேன்.அனைத்தும் சரியாகிவிட்டால், ஒரு பெரிய மார்க்கெட்டிங் இயக்கத்தை நாங்கள் தொடங்குவோம். அது உங்களுக்குப் பிடிக்கும்!உலகின் சிறந்த சமூக வலைதள அனுபவத்தை வழங்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

நிக்கோல்தாம்சன்
செப் 27, 2025 06:37

யோவ் திருட்டுவிட ஸ்டார்க்கே இதனை வெளியில் சொல்லியதே ஒரு வடஇந்தியர் தாண்டா , உன்னோட கார்பொரேட் குடும்பத்து அடிமைகள் அவங்களுக்கு லாபம்மில்லாததை சொல்லவே மாட்டாங்க


Bhaskar Srinivasan
செப் 26, 2025 23:08

ஆம் நான் வெளிநடவரின் காலில் விழுவேன் ஆனால் எனது பக்கத்துக்கு வீடுகரனோ எனது உடன்பிறவா சகோதரனோ வளர்ந்தால் அதை கேலிசெய்வேன், உள்நோக்கம் உள்ளது என்று புறம் பேசுவேன் - என்ன செய்வதை 300 வருட அடிமை புத்தி அவன் தந்த எட்டு சுரைக்காய் கல்வி - அப்படிதான் பேச செய்யும்.


Venugopal S
செப் 26, 2025 21:11

அதுசரி, ஆனால் செயலிக்கு தமிழில் அரட்டை என்று பெயர் வைத்திருக்கிறாரே, மத்திய அரசு சமஸ்கிருதம் அல்லது ஹிந்தியில் பெயர் வைத்தால் மட்டும் தானே அங்கீகாரம் செய்வார்கள்!


Sarashan
செப் 26, 2025 20:59

ஆபிரகாம் லிங்கன் தனது வணிகங்களில் பலமுறை தோல்வியுற்று, பலமுறை தேர்தலில் தோல்வியடைந்த பிறகு அமெரிக்க அதிபராக வெற்றிபெற்று, அமெரிக்காவின் வரலாற்றை மாற்றினார். அதேபோல், வால்ட் டிஸ்னி தனது ஆரம்ப காலங்களில் பல தோல்விகளைச் சந்தித்தாலும், கார்ட்டூன் துறையில் அவர் வெற்றி பெற்றார். மேலும், ஸ்டீவ் ஜாப்ஸ் கூட ஆப்பிள் நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்டு, பின்னர் தனது சொந்த நிறுவனங்கள் மூலம் அசைவூட்டும் துறையில் புரட்சியை ஏற்படுத்தி, இறுதியில் மீண்டும் ஆப்பிள் நிறுவனத்திற்கே திரும்பினார். இப்படி பல உதாரணங்களைக் கூறலாம். வரலாற்றில் தேடலாம். தயவுசெய்து... முடியாது என்று சொல்லி இதையும் சாதாரணமாகக் கடந்துபோக எண்ண வைத்துவிடாதீர்கள், நண்பரே. முடியும் என்று முயன்றால், மீண்டும் ஒரு வெற்றி வரலாறு படைக்கப்படும்.


spr
செப் 26, 2025 20:12

பாராட்டலாம். ஆனால் இவர் பல வெளிநாட்டிலேயும் தனது நிறுவனத்தின் கிளைகளை அமைத்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. சோகோவின் அமெரிக்க தலைமையகம் தற்போது கலிபோர்னியாவில் உள்ளது. இவர்கள் பொதுவாக நம்மை உள்ளே இழுத்து ஒரு காலத்தில் அதிக விலைக்குப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு கைமாற்றி விட வாய்ப்புள்ளது ஆகையால் இஸ்லாமிய நாடுகளை போல இந்திய அரசு இவரைக் கட்டுப்படுத்தினால் நம்பலாம்


Moorthy
செப் 26, 2025 19:51

ட்விட்டர் X தளத்துக்கு போட்டியாக "கூ " என்ற ஒரு செயலி நம் நாட்டில் உருவாக்கப்பட்டு பிறகு காணாமலேயே போய் விட்டது... சோகோ நிறுவனம் கூட உலா " என்ற ஒரு செயலியை கூகுள் குரோம் கு போட்டியாக தொடங்கி சில காலத்துக்கு பின் காணாமல் போனது ....


இரா. பாலா
செப் 26, 2025 20:57

என்னது உலா காணாமல் போய்விட்டதா? சற்று நேரத்திற்கு முன்னர் கூட உபயோகித்தேன்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை