உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 20,000 மது பாட்டில்கள் பறிமுதல் கலால் துறை அதிரடி நடவடிக்கை

20,000 மது பாட்டில்கள் பறிமுதல் கலால் துறை அதிரடி நடவடிக்கை

புதுடில்லி:தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், கடந்த 15 நாட்களில் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 20,000 மது பாட்டில்களை, கலால் துறையினர் பறிமுதல் செய்து உள்ளனர். அதேபோல, 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள 32 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. அண்டை மாநிலமான ஹரியானாவில் இருந்துதான் அதிகளவில் மது பாட்டில்கள் கடத்தி வரப்பட்டுள்ளன.நேற்று முன் தினம் இரவு, புராரி மற்றும் மஹிபால்பூரில் இரண்டு வாகனங்களில் நடத்திய சோதனையில், 5,000 பாட்டில் மதுபானம் சிக்கியது. இதன் மதிப்பு 12 லட்சம் ரூபாய் என அதிகாரிகள் கூறினர்.மொத்தம் 3,036 மதுபாட்டில்களை ஏற்றிச் சென்ற லாரி, ஜி.டி. கர்னால் சாலை வழியாக டில்லிக்குள் நுழைந்தது. அந்த லாரியை 14 கி.மீ., தூரத்துக்கு கலால் துறையினர் துரத்திச் சென்று வடக்கு டில்லி புராரியில் தடுத்து நிறுத்தினர்.அதேபோல, மஹிபால்பூரில் ஒரு மினி லாரி பிடிபட்டது. அதில் இருந்த 1,812 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்களுடன் கலால் துறையினர், தேர்தல் நடத்த விதிமுறை மீறலை கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருவதாக, கலால் துறை அதிகாரி ஒருவர் கூறினார்.தேர்தல் ஆணைய அறிவுறுத்தல்படி, ஹோட்டல், கிளப் மற்றும் பார்களில் கூப்பன் அடிப்படையில் யாருக்கும் மது வழங்க வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளது. முறைகேடுகளைத் தடுக்க மதுபானக் கிடங்குகளில் சோதனை நடத்தப்படுகிறது. அதேபோல், கூடுதலாக கண்காணிபுக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !