உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆன்லைன் சேவைகளை பயன்படுத்தும் பயங்கரவாதிகள்: எப்ஏடிஎப் குற்றச்சாட்டு

ஆன்லைன் சேவைகளை பயன்படுத்தும் பயங்கரவாதிகள்: எப்ஏடிஎப் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 2019 புல்வாமா தாக்குதல் மற்றும் 2022 கோரக்நாதர் உள்ளிட்ட பல பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களுக்கு ஆன்லைன் வர்த்தக தளங்கள் மற்றும் ஆன்லைன் பணப்பரிமாற்றங்களை பயன்படுத்தி வருவதாக எப்ஏடிஎப் தெரிவித்துள்ளது.சர்வதேச அளவில் பயங்கரவாதிகளுக்கு பண உதவி கிடைப்பதை தடுப்பது, சட்டவிரோத பணப் பரிமாற்றத்தை தடுப்பது ஆகிய நோக்கங்களுடன் குரூப் 7 (ஜி 7) நாடுகளால் பைனான்சியல் ஆக்சன் டாஸ்க் போர்ஸ் என்ற fatf சர்வதேச அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: டிஜிட்டல் வர்த்தக தளங்கள் மற்றும் நிதி தொழில்நுட்பங்களை பயங்கரவாதிகள் தவறாக பயன்படுத்துகின்றனர். நிதி சேகரிக்கவும், தங்கள் அமைப்பை வளர்க்கவும் சொகுசான வழிகளை பயங்கரவாதிகள் கையாண்டு வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் நிதி சார்ந்த தொழில்நுட்ப வசதிகள் விரைவான வளர்ச்சியை பயங்கரவாதிகள் நிதியை திரட்டுவதற்கான பல வழிகளை பயன்படுத்துகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.மேலும், இதற்கு உதாரணமாக 2019 ம் ஆண்டு காஷ்மீரின் புல்வாமா பயங்கரவாத தாக்குதலின் போது, பயங்கரவாதிகள் வைத்த ஐஇடி வெடிகுண்டில் பயன்படுத்தப்படும் அலுமினியம் பவுடரை 'அமேசான்' ஆன்லைன் வணிக தளம் மூலம் வாங்கியதை எடுத்துக்காட்டி உள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்புகள் நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதில் பாகிஸ்தானைச் சேர்ந்த 19 பேர் மீது என்ஐஏ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோரக்நாதர் கோவிலில் கடந்த 2022ம் ஆண்டு ஏப்., மாதம், பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு தேவையான நிதியான ரூ.6.7 லட்சம் நிதியை பே பால் செயலி மூலம் பரிமாற்றம் செய்தனர். பணப்பரிமாற்றம் நடப்பதை மறைக்க விபிஎன் சர்வர்களை பயங்கரவாதிகள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ