உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மத்திய பிரதேசத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ பற்றியதால் பரபரப்பு

மத்திய பிரதேசத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ பற்றியதால் பரபரப்பு

போபால்: மத்தியபிரதேசத்தில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி பெட்டியில் தீ பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.மத்தியப் பிரதேசத்தின் ரத்லாம் மாவட்டத்தில், திருவனந்தபுரம்-ஹஸ்ரத் நிஜாமுதீன் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி பெட்டியில் இன்று (மே 17) காலை பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, ரயில்வே அதிகாரிகள் ரயிலை நிறுத்தி, பாதிக்கப்பட்ட பெட்டியில் இருந்த அனைத்து பயணிகளையும் வெளியேற்றினர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hcz6dgd5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ரயில் பெட்டியிலிருந்து பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. டில்லி-மும்பை ரயில் பாதையில் ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை