உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தூர்வாரும் பணி கெடு நீட்டிப்பு

தூர்வாரும் பணி கெடு நீட்டிப்பு

புதுடில்லி:பொதுப்பணித்துறை வடிகால்வாய்களில் தூர்வாரும் பணி, 60 சதவீதம் மட்டுமே நிறைவடைந்துள்ளது. வரும், 30ம் தேதிக்குள் பணிகளை முடிக்க கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.டில்லி மாநகரில் வடிகால்வாய்களில் தூர்வாரும் பணிகளை ஜூன் 15ம் தேதிக்குள் முடிக்க, பொதுப்பணித்துறை அமைச்சர் பர்வேஷ் வர்மா, கெடு நிர்ணயித்திருந்தார். ஆனால், மொத்தமுள்ள 2,140 கி.மீ., வடிகால்வாய்களில், 1,294 கி.மீ., தூரத்துக்கு மட்டுமே தூர்வாரும் நிறைவடைந்துள்ளது.தென்மேற்கு மண்டலம்- - 2ல் மட்டுமே 100 சதவீத தூர்வாரும் பணி முடித்துள்ளது. மேற்கு சாலை- - 2ல் 31 சதவீதம் மட்டுமே தூர் வாரப்பட்டுள்ளது. இதையடுத்து, தூர்வாரும் பணிகளை முடிக்க இம்மாதம் 30ம் தேதி வரை கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.கடந்த 10ம் தேதி, வெள்ளக் கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்த அமைச்சர் பர்வேஷ் வர்மா, 'நீர்ப்பாசனத் துறை கட்டுப்பாட்டில் உள்ள, 76 வடிகால்களில் 90 சதவீதம் தூர்வாரும் பணி முடிந்துள்ளது. பொதுப்பணித்துறை வடிகால்களில், 50 சதவீத பணிகள் முடிந்து விட்டது' என கூறியிருந்தார். டில்லி மாநகர் முழுதும், 35 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, தூர்வாரும் பணிகள் மும்முரமாக நடக்கின்றன.பொதுப்பணித்துறை அறிக்கைப்படி, 2023ம் ஆண்டில் டில்லி மாநகரில், 308 இடங்கள் வெள்ளம் தேங்கும் பகுதிகள் என கண்டறியப்பட்டன. அதுவே இந்த ஆண்டு, 445 இடங்களாக அதிகரித்துள்ளது. அதில், 335 இடங்கள் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை