உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெங்களூரு போலீசாருக்காக கண்கள் பராமரிப்பு திட்டம்

பெங்களூரு போலீசாருக்காக கண்கள் பராமரிப்பு திட்டம்

பெங்களூரு: பெங்களூரு போலீசாருக்காக கண்கள் பராமரிப்பு திட்டம் நேற்று துவங்கப்பட்டது.பெங்களூரு நகரில் உள்ள போலீஸ் நிலையங்களில் பணியாற்றும், போலீசார், அவரது குடும்பத்தினருக்கான கண்கள் பராமரிப்பு திட்டத்தை, பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் தயானந்தா நேற்று துவக்கி வைத்தார்.திட்டம் குறித்து அவர் கூறியதாவது:நேத்ராதாமா சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனை, ஷ்ரத்தா ஐ கேர் டிரஸ்ட், ரோட்டரி பெங்களூரு ஆகியவற்றுடன் இணைந்து உருவாக்கப்பட்ட கண்கள் பராமரிப்பு திட்டம், போலீசாரின் கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.இந்த திட்டம், ஆரம்பகால பிரச்னையை கண்டறிதல், சரியான நேரத்தில் சிகிச்சை அளிப்பதில் கவனம் செலுத்தும். போலீசாரின் கடினமான மற்றும் அடிக்கடி மன அழுத்த சூழ்நிலையில் பணிபுரிகின்றனர். அவர்களின் கணகள் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்துவது நன்மை பயக்கும்; இதன் மூலம் சமூகத்திற்கும் அவசியமானது. இந்த திட்டத்தின் மூலம் 20,000 க்கும் மேற்பட்ட போலீசார், அவரது குடும்பத்தினர் பயன்பெறுவர்.இவ்வாறு அவர்கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை