உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரசிகை உயிரிழந்த வழக்கு: நடிகர் அல்லு அர்ஜூனுக்கு கிடைத்தது ஜாமின்

ரசிகை உயிரிழந்த வழக்கு: நடிகர் அல்லு அர்ஜூனுக்கு கிடைத்தது ஜாமின்

ஹைதராபாத்: புஷ்பா 2 படம் பார்க்க தியேட்டருக்கு சென்ற ரசிகை, கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த வழக்கில் நடிகர் அல்லு அர்ஜூனுக்கு ஜாமின் வழங்கி நம்பள்ளி கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் அல்லு அர்ஜூனின் புஷ்பா 2 திரைப்படம் வெளியானது. இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் திரையிடப்பட்டது. அப்போது, அங்கு வந்த அல்லு அர்ஜூனை காண ரசிகர்களின் கூட்டம் முண்டியடித்தனர். இதனால், ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி, ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். மேலும், அவரது மகன் கவலைக்கிடமான முறையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=k4qr8ud8&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இறந்துபோன பெண்ணின் கணவர் பாஸ்கர் அளித்த புகாரின் பேரில், அல்லு அர்ஜூனை போலீசார் கைது செய்தனர். ஒருநாள் சிறையில் இருந்த அவர், தற்போது ஜாமினில் வெளிவந்துள்ளார். இந்த விவகாரம் தெலங்கானா சட்டசபை வரையில் எதிரொலித்தது. மேலும், அல்லு அர்ஜூனின் வீட்டின் மீது மாணவர் சங்கத்தினர் தாக்குதலும் நடத்தினர். இதனால், அல்லு அர்ஜூன் விவகாரம் தெலங்கானாவில் பெரு பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. இதனிடையே, அல்லு அர்ஜூன் தரப்பில் இருந்து பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு இரண்டு கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் தேவையான உதவிகளை செய்வதாகவும் வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நடிகர் அல்லு அர்ஜூனுக்கு ஜாமின் வழங்கி நம்பள்ளி கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஐகோர்ட் வழங்கிய இடைக்கால ஜாமினில் வெளியே இருக்கும் அல்லு அர்ஜூனுக்கு, ரூ.1 லட்சம் பிணைத்தொகையுடன் கூடிய வழக்கமான ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இது அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ