உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மிக் 21 போர் விமானங்களுக்கு பிரியாவிடை!

மிக் 21 போர் விமானங்களுக்கு பிரியாவிடை!

சண்டிகர்: இந்திய விமானப்படையில் 63 ஆண்டுகள் சேவையாற்றிய மிக் 21 ரக போர் விமானங்களுக்கு இன்று பிரியா விடை வழங்கப்பட்டது.இந்திய விமானப்படையில், ரபேல், சுகோய், மிக், மிராஜ், தேஜஸ் போர் விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன. இவற்றில் சோவியத் யூனியனில் தயாரிக்கப்பட்ட மிக் 21 ரக போர் விமானங்கள், 60 ஆண்டுகளாக இந்திய விமானப்படையின் பயன்பாட்டில் இருந்தன. நவீன தொழில்நுட்பங்கள் கொண்ட புதிய விமானங்களுக்கு இந்திய விமானப்படை மாறுவதை முன்னிட்டு, பழைய மாடல் விமானங்களுக்கு ஓய்வு தர முடிவு செய்யப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=usmliyas&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0எனவே, மிக் 21 ரக விமானங்களின் சேவையை நிறுத்த பாதுகாப்புத்துறை திட்டமிட்டது. அதன்படி, சண்டிகரில் மிக் 21 ரக போர் விமானங்களின் வழியனுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தளபதிகளும் கலந்து கொண்டனர். அப்போது, கடைசியாக ஒருமுறை மிக் 21 ரக விமானங்கள் வானில் பறந்தன. இதனை கண்டு பாதுகாப்புத்துறை அதிகாரிகளும், வீரர்களும் நெகிழ்ச்சியடைந்தனர்.மிக் 21 ரக போர் விமானங்கள், 1965 மற்றும் 1971ல் நடந்த போரிலும், கார்கில் போர் மற்றும் பாலக்கோட் ஆபரேஷன்களில் முக்கிய பங்கு வகித்தன. மிக்-21 ரக போர் விமானங்கள் ஓய்வு பெற்ற நிலையில், அவற்றுக்கு பதிலாக தேஜஸ் மார்க் 1ஏ ரக போர் விமானங்கள் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட இருக்கின்றன. இதற்காக, 97 இலகு ரக தேஜஸ் போர் விமானங்களை வாங்குவதற்காக, ரூ.62,370 கோடியில் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துடன் மத்திய பாதுகாப்பு துறை ஒப்பந்தம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா - ரஷ்யா உறவுக்கு சாட்சியம்

இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது; மிக் 21 நமது நாட்டின் நினைவுகளிலும், உணர்வுகளிலும் ஆழமாக பதிந்துள்ளது. 1963ல் மிக் 21 முதல்முறையாக நம்முடன் இணைந்தது முதல், இன்று வரையான 60 ஆண்டுகளுக்கும் மேலான இந்த பயணம் இணையற்றது.நம்மில் பலருக்கு இது ஒரு போர் விமானம் மட்டுமல்ல, மாறாக ஒரு குடும்ப உறுப்பினர் போன்றது. இது இந்தியா - ரஷ்யா உறவுகளுக்கான சாட்சியம். மிக் 21 நமது தன்னம்பிக்கையை வடிவமைத்தது. இத்தகைய நீண்ட பயணத்தில், இந்த போர் விமானம் ஒவ்வொரு சவாலையும் எதிர்கொண்டு, ஒவ்வொரு முறையும் திறனை நிரூபித்துள்ளது, இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

அஜய் இந்தியன் தெற்கு
செப் 27, 2025 00:37

இந்திய இராணுவம் பிரியாவிடை கொடுக்க வேண்டியது இல்லை.இதை ஆளில்லா போர் விமானமாக மாறுதல் செய்ய வேண்டும். பின் போலியாக பாகிஸ்தான் உள்ளே அனுப்பி வைக்கவும் எதிர்களை ஒழித்து கட்டவும் பயன் படுத்தலாம். புதிதாக வாங்க பல ஆயிரம் கோடிகள் தேவை, ஆனால் மாறுதல் செய்ய சில கோடிகள் தான் தேவை படும்


cpv s
செப் 26, 2025 18:19

HAL must be done private , then only they will work otherwise they will come and go and get monthy salary without any progress


duruvasar
செப் 26, 2025 14:36

விட்டு போன முக்கிய தகவல். மிக் 21 விமானத்தில் சென்று தான் அபிநந்தன் அமெரிக்கா விமானத்தை சுட்டு வீழ்த்தினார்.


SANKAR
செப் 26, 2025 15:36

you forgot one thing ...it was Abhinandan s plane that was shot down ultimately and he became POW


Saravanan
செப் 26, 2025 13:52

இனி ஆளில்லாத ட்ரொன் ஆக மாற போகிறார்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை