உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விவசாயிகளே எங்களின் முதல் முன்னுரிமை: பிரதமர் மோடி பெருமிதம்

விவசாயிகளே எங்களின் முதல் முன்னுரிமை: பிரதமர் மோடி பெருமிதம்

​புதுடில்லி: 'சர்வதேச அளவில் நெருக்கடியான சூழல் நிலவினாலும், நாட்டின் விவசாயிகளே அரசின் முதல் முன்னுரிமை' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.​2026 - 27ம் ஆண்டிற்கான குளிர்கால பருவ சாகுபடிக்குத் தேவையான பாஸ்பரஸ், பொட்டாஷ் உரங்களுக்கான மானியத்துக்கு, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.

ரூ.62,370 கோடி ஒதுக்கீடு

​இந்த குளிர்கால பருவ உர மானியத்திற்காக, சுமார் 62,370 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 2025 - 26ம் ஆண்டின் ரபி பருவ மானியத் தொகையை விட, சுமார் 24,418 கோடி ரூபாய் அதிகம்.​​மத்திய அமைச்சரவையின் இந்த முடிவை வரவேற்று, பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:​நம் நாட்டின் விவசாயிகள், எப்போதும் எங்கள் அரசின் முன்னுரிமையாக இருந்து வருகின்றனர். உலகளவில் சவாலான சூழ்நிலைகள் நிலவி வரும் போதிலும், விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் மத்திய அரசு எந்தக் குறையும் வைக்கவில்லை.இதன் ஒரு பகுதியாக, 2026 - 27 குளிர்கால பருவத்திற்கான உர மானியத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் வாயிலாக, சர்வதேச சந்தையில் ஏற்படும் உர விலை உயர்வு, நமது விவசாயிகளை எந்த வகையிலும் பாதிக்காது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், விவசாயிகளுக்குத் தடையின்றி நியாயமான, கட்டுப்படியான விலையில் உரங்கள் தொடர்ந்து கிடைக்கும். ​இவ்வாறு பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

சத்திய சோதனை
நவ 14, 2026 13:05

ஏதாவது தேர்தல் வரப் போகுதா? ஆமாம்ல உத்தரப் பிரதேசம் மற்றும் சில மாநில தேர்தல்கள் வரப் போகுது அதான் இப்படியா?


பிரேம்ஜி
நவ 13, 2026 07:00

அப்படியா? இவ்வளவு நாள் விவசாயிகள் யாரு என்று தெரியவில்லை. இப்போதாவது தெரிந்தது. பாராட்டுக்கள்!


Bhaskaran
நவ 12, 2026 20:17

பசுமைப்புரட்சி கொண்டுவந்து புது ரக குறுகிய கால நெற்பயிர்களை அறிமுகப்படுத்தி பஞ்சம் போக்கிய பாரதரத்னா சி.சுப்பிரமணியம் அவருக்கு துணை நின்ற வேளாண் விஞ்ஞானி சாமிநாதன் ஆகியோரை இன்றுவரை வசைபாடும் கும்பல் தமிழகத்தில் இருந்துவருகிறது .


Bhaskaran
நவ 12, 2026 18:01

அப்ப தொழிலாளிகள் வேண்டாமா .உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்யவும்.தனியார் நிறுவனங்களில் இருந்து ஓய்வு பெற்ற தொழிலாளிகள் குறைந்த பட்ச சென்னை உயர்த்தி தர மனமில்லா மத்திய அரசு இத்தனைக்கும் தொழிலாளிகளின் பிஎஃப் பணத்தில் ஒருபகுதி அரசிடமே உள்ளது . பிஎஃப் பணத்துக்கு குறைந்த வட்டி தரும் இந்த அரசு


Karthi Keyan
நவ 12, 2026 13:15

Wow modi


விருமாண்டி
நவ 12, 2026 11:11

திமாகி நக்சலைட்டுகள், ஜென்-Z.


மணியன்
நவ 12, 2026 10:41

அப்படியானால் விவசாயிகளுக்கு மயில்களால் ஏற்படும் சேதத்தையும்,நஷ்டத்தையும் வைத்து தேசியபறவை என்ற சட்டத்தின் மூலம் விவசாயிகளை அரசு துன்புறுத்தலாமா. விவசாய நிலங்களில் இச்சட்டத்துக்கு விலக்களித்து நாட்டிற்கு உணவிடும் பாட்டாளிகளை நிம்மதியாக வாழவிடலாமே.


Krishna
நவ 12, 2026 10:31

False Propagandas.


rahul
நவ 12, 2026 11:45

useless krishan pl take medical checkup urgently with brain


கிஜன்
நவ 12, 2026 10:26

1965லேயே ஜெய் ஜவான் ஜெய் கிசான் என்று முழங்கியவர் காங்கிரஸை சேர்ந்த இந்தியாவின் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அவர்கள்


Apposthalan samlin
நவ 12, 2026 10:25

விவசாயம் இப்பொழுது பண்ண முடியாது எல்லா விளையும் ஏறி விட்டது விலை பொருட்களை தவிர தென்னை மரம் ஏறுவதற்கு 350 ருபாய் தேங்காய் 350 ரூபாய்க்கு கிடைப்பது இல்லை பனை மரம் ஏற 300 ரூபாய் பனங்காய் வெட்டி கிழங்கு வர 350 கிடைக்கும் ஓகே வாழை பருத்தி நெல்லு போட்டல் உரம் மருந்து கூலி எல்லாம் பார்த்து நஷ்ட்டம் தான் வருகிறது .சொந்த ஆள் இருந்தால் வரவு சிலவு போக கொஞ்சம் கிடைக்கும் . பிளாட் போட்டு வித்தால் அதிக லாபம் கிடைக்கிறது .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை