உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வெங்காயம் விலை விவசாயிகள் குஷி

வெங்காயம் விலை விவசாயிகள் குஷி

பெங்களூரு: கர்நாடகாவில் வெங்காய விலை, தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. விரைவில் கிலோவுக்கு 100 ரூபாயை எட்டியுள்ளது. விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.மாநிலத்தில் சில நாட்களுக்கு முன்பு, வெங்காயம் விலை சரிந்தது. கிலோவுக்கு 20 ரூபாய் வரை விற்கப்பட்டது; தற்போது விலை அதிகரித்து, 70 முதல் 80 ரூபாயாகி உள்ளது. இன்னும் சில நாட்களில் 100 ரூபாயை எட்டும் வாய்ப்புள்ளது.சில நாட்களுக்கு முன்பு, கன மழை பெய்தது. வெங்காய விளைச்சல் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. கைக்கு கிடைத்த சொற்ப வெங்காயமும் அழுகுகிறது. இதனால் மார்க்கெட்டுகளில், வரத்து குறைந்துள்ளது; தேவை அதிகரித்துள்ளது. அதற்கு ஏற்றபடி வரத்து இல்லை.இதற்கு முன்பு மஹாராஷ்டிராவில் இருந்து, லோடு கணக்கில் வெங்காயம் வந்தது. அங்கும் மழை பெய்ததால், விளைச்சல் பாழானது. இதனால் வெங்காயம் வருவது இல்லை. இதுவும் விலை உயர்வுக்கு காரணம்.பெங்களூரின் சில இடங்களில், ஒரு கிலோ வெங்காயம் 50 முதல் 60 ரூபாயாகவும், பல இடங்களில் 70 ரூபாயாகவும் விற்கப்படுகிறது. நல்ல லாபம் கிடைப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். சில இடங்களில் விற்பனைக்கு வெங்காயம் இல்லாததால், வருத்தம் அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை