உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பைக்கை வழிமறித்த யானை தப்பிய தந்தை, பிள்ளைகள்

பைக்கை வழிமறித்த யானை தப்பிய தந்தை, பிள்ளைகள்

தட்சிணகன்னடா: தட்சிண கன்னடா, பெல்தங்கடியின், சிசிலா கிராமத்தின், கள்ளாஜே என்ற பகுதியில் வசிப்பவர் வசந்த கவுடா. இவர் தினமும் தன் பிள்ளைகள் லாவண்யா, அத்வித்தை பைக்கில் பள்ளிக்கு அழைத்து சென்று விடுவது வழக்கம். அதே போன்று நேற்று காலை 8:30 மணியளவில், பிள்ளைகளை பைக்கில் அமர்த்தி கொண்டு, பள்ளிக்கு புறப்பட்டார். கிராமத்தின் அருகில் செல்லும் போது, காட்டு யானை எதிரே வந்தது. இதை பார்த்து வசந்த கவுடா திடீர் பிரேக் போட்டு, பைக்கை நிறுத்தியதால் தந்தையும், பிள்ளைகளும் கீழே விழுந்தனர்.கை, கால்களில் லேசான காயம் ஏற்பட்டது. யானை அருகில் வருவதை கண்டு, அங்கிருந்து தப்பி ஓடியதால் உயிர் பிழைத்தனர்.பைக் அருகில் வந்த யானை, பைக்கை காலால் மிதித்து துவம்சம் செய்தது. பெல்தங்கடியில் காட்டு யானை தொந்தரவு அதிகம் உள்ளது. யானைகளை விரட்டும்படி மக்கள், வனத்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ