பெண் தொழிலாளி கொலை கொலையாளி தலைமறைவு
மாலுார்: தன்னுடன் வேலை செய்த பெண்ணை கொலை செய்த கட்டட தொழிலாளி தலைமறைவானார். ஆந்திர மாநிலம், குடுப்பள்ளி அருகே உள்ள கோரிகானகுண்டே என்ற கிராமத்தை சேர்ந்தவர் யசோதம்மா, 45. குடிபண்டே கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ் 45. மாலுார் ஒயிட் கார்டன் அருகே கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இவர்கள் இருவரும் தினமும் கட்டட வேலைக்கு காலையில் ரயிலில் வந்து விட்டு மாலையில் வீடு திரும்புவது வழக்கம்.செவ்வாய் கிழமையன்று மாலையில் வேலை முடிந்த பின், வீட்டிற்கு செல்லாமல் அந்த கட்டடத்திலேயே தங்கினர். இருவருமே அன்றிரவு குடிபோதையில் இருந்துள்ளனர். திடீரென இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் யசோதம்மா தலையில், சந்தோஷ் கட்டையால் பலமாக தாக்கினார். அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சந்தோஷ் தலைமறைவானார்.புதன் கிழமை காலையில், கட்டட வேலைக்கு வந்த மற்ற தொழிலாளர்கள், யசோதம்மா பிணமாக கிடந்ததை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சந்தோஷை போலீசார் தேடி வருகின்றனர்.