உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எஸ்ஐஆர்-ஐ எதிர்த்து களப்போராட்டம்: முதல்வர் ஸ்டாலின்

எஸ்ஐஆர்-ஐ எதிர்த்து களப்போராட்டம்: முதல்வர் ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: எஸ்ஐஆர்-ஐ தடுப்பதே நம்முன் இப்போதுள்ள ஆகப்பெரும் கடமை. களப்போராட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியினர் கூடியுள்ளனர் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) விவகாரத்தில் தேர்தல் கமிஷனை கண்டித்து சென்னை உட்பட 43 இடங்களில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. தமிழகம் முழுவதும் திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகர்கோவில், மதுரை உள்ளிட்ட இடங்களில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=au1yukpj&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பான புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது: எஸ்ஐஆர்-ஐத் தடுப்பதே நம்முன் இப்போதுள்ள ஆகப்பெரும் கடமை. ஒருபுறம், மக்களாட்சியின் அடிப்படையான ஓட்டுரிமையையே பறிக்கும் எஸ்ஐஆர் எனும் ஆபத்துக்கு எதிராகச் சட்டப் போராட்டம், களப் போராட்டம்.மறுபுறம், தொடங்கப்பட்டுவிட்ட #SIR பணிகளில் குளறுபடிகளைத் தடுத்திட வார் ரூம், ஹெல்ப் லைன். எஸ்ஐஆர்-ஐ எதிர்த்து இன்று நடக்கும் களப்போராட்டத்தில். தமிழகம் எங்கும் பதாகைகளை ஏந்தியும், கண்டன முழக்கங்களை எழுப்பியும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர் கூடியுள்ளனர். தொடர்ந்து செயலாற்றுவோம். நம் மக்களின் ஓட்டுரிமையைப் பாதுகாப்போம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 50 )

SP
நவ 11, 2025 21:50

தேசம் இக்கட்டான நிலையில் இருக்கும் போதெல்லாம் தமிழகத்தில் அதை திசைதிருப்ப போராட்டங்கள் நடத்துவது திமுகவுக்கு புதிது அல்ல. சீனா பாகிஸ்தான் உடன் போர் நடந்த காலங்களில் இந்தி எதிர்ப்பு, ராமர் படம் அவமதிப்பு என்று இவர்கள் செய்த அட்டூழியங்கள் அதிகம்


தமிழ்வேள்
நவ 11, 2025 20:30

தமிழகத்தை பிரித்து சிதறடிக்காமல் திராவிடமோ அல்லது திக/ திமுகவோ அழியாது..வெட்ட வெட்ட துளிர்த்து எழும் ரக்தபீஜாசுரன் அல்லது வேலிக்காத்தான் முள் போன்றவர்கள் இவர்கள்.. இவர்களின் மூல பலம், மொழி சாதி வெறியூட்டப்பட்ட ஒற்றை தமிழகம் & சினிமா...போதை வியாபாரத்தில் வரும் காசு தேசவிரோத செயல்களுக்கு பயன்படுத்தி தங்கள் இருப்பைக் காப்பாற்றி கொள்கிறார்கள்..எனவே சிதறிய தமிழகம் மட்டுமே திராவிடத்தை அழிக்கும்....நல்லவை சீக்கிரம் நடத்தப்பட வேண்டும்...ஒரே தமிழகம் உள்ளவரை தேசிய கட்சி எதுவாயினும் இங்கு காலூன்றி நிற்பது கானல் நீர் மட்டுமே.


SVR
நவ 11, 2025 19:30

பிஹாரில் தேர்தல் இன்று நடந்து முடிந்து விட்டது. இன்னமும் இந்த திராவிடம் எஸ் ஐ ஆர் தமிழ்நாட்டில் நடக்கக்கூடாது என்று கூறுவது சிறு பிள்ளைத்தனம். உச்ச நீதிமன்றம் பிஹாரில் எஸ் ஐ ஆர் ஐ ஸ்டே செய்யவில்லை. இருந்தும் இந்த உச்ச நீதிமன்றம் இன்று எஸ் ஐ ஆர் க்கு எதிராக ஆறு பெட்டிஷனை ஏற்றுக்கொண்டு எலெக்ஷன் கமிஷனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பிஹாரில் தேர்தல் முடிந்து விட்டது. அப்புறம் எதற்கு இந்த தமாஷா. இந்த விக்காரர் என்னதான் தலை கீழாக நின்றாலும் எஸ் ஐ ஆர் தடை செய்யப்படப்போவது இல்லை. எல்லாம் பம்மாத்து வேலை. எல்லாம் கண் துடைப்பு.


சிட்டுக்குருவி
நவ 11, 2025 19:13

இது நாட்டின் சுதந்திரத்திற்கு எதிரான போராட்டம் .சுதந்திரத்தை சீர்குலைத்து சிறு குறுநிலமன்னர்களாக தங்கள் வாரிசுகளை அமர்த்திவைக்க மக்களை தவறாக நடத்தி மூளைச்சலவை செய்யும்வேலை .மக்கள் புரிந்துகொண்டு தங்கள் வாக்குகளில்தான் எல்லா உரிமைகளும் அடங்கியிருக்கின்றது என்றறிந்து தங்கள் வாக்குரிமையை பதிவுசெய்துகொள்ளவேண்டும் .நம் முன்னோர்கள் நமக்காக செய்த தியாகங்களின் அடையாளம்தான் நமது வாக்குரிமை .அதை மற்றவர்கள் பறிக்கவிட்டுவிடாதீர்கள் .மக்கள் ஆர்வதோடு தங்கள் வாக்குரிமையை பதிவுசெய்து கொள்ளவேண்டும் .


Barakat Ali
நவ 11, 2025 19:04

மக்களின் கவனத்தைத் திசை திருப்ப - குறிப்பாக கே என் நேரு விவகாரம் - எங்களுக்கு எஸ் ஐ ஆர் கிடைச்சிருச்சு .........


தத்வமசி
நவ 11, 2025 18:51

நாடக கலைஞர்கள் தொடக்கி வைத்து, நாடக கலைஞர்களால் வளர்க்கப்பட்ட கட்சியல்லவா... இன்றும் நாடகம் நடத்துகிறது.


M Ramachandran
நவ 11, 2025 18:46

கோவை குண்டு8 விடுப்பு முதல் பல குற்ற செயலுக்கு துணை புரியும் குடும்பத்துடன் நாட்டிற்கு எதிரிடையாக பிரச்சாரம் செய்யும் திருட்டு கும்பல்களை கும்முடிபூண்டி தாண்டி விரட்டுவோம்.


M Ramachandran
நவ 11, 2025 18:43

இந்து விரோத தேச விரோத கும்பலை நாட்டை விட்டு விரட்ட வேண்டிய தருணம். குடும்பத்துடன் தமிழ்நாட்டை சூறையாடிய குடும்ப திருட்டு திராவிடம் பேசும் கும்பலை அவர்களுக்கு பிரியமான அரேபிய நாடுகளுக்கு விரட்டுவோம்.


Kumar Kumzi
நவ 11, 2025 17:49

வரும் சட்டசபை தேர்தலில் இந்துமத ஜென்ம விரோதி துண்டுசீட்டு கோமாளியை இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைந்து துரத்தியடிக்க வேண்டும்


Suppan
நவ 11, 2025 17:02

திராவிட மாடல் ஸ்டாலினுக்கு தைரியம் இருந்தால் எஸ் ஐ ஆறுக்கு அரசு அதிகாரிகளை அனுப்ப மாட்டோம் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கட்டுமே . சும்மா பூச்சாண்டி காட்டினால் மக்கள் ஏமாறமாட்டார்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை