உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போர் விமான தயாரிப்பு வாய்ப்பிழந்தது எச்.ஏ.எல்.,

போர் விமான தயாரிப்பு வாய்ப்பிழந்தது எச்.ஏ.எல்.,

புதுடில்லி: ஏ.எம்.சி.ஏ., எனப்படும், ‘அட்வான்ஸ்டு மல்டிரோல் காம்பேட் ஏர்கிராப்ட்’ என்ற அதிநவீன பல்முனை தாக்குதல் போர் விமான திட்டத்தை நம் நாடு செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக, ‘ரேடார்’கள் கண்களில் சிக்காத உள்நாட்டில் தயாரிக்கப்படும் மேம்பட்ட நடுத்தரப்போர் விமான முன்மாதிரிகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான டெண்டரில் ஏழு நிறுவனங்கள் பங்கேற்ற நிலையில் மத்திய அரசுக்குச் சொந்தமான விமானத் தயாரிப்பு நிறுவனமான எச்.ஏ.எல்., எனப்படும், ‘ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ்’ தொழில்நுட்ப காரணங்களால் தகுதி பெறவில்லை. ‘இதன் மூலம் உள்நாட்டுப் போர் விமான திட்டத்திலிருந்து எச்.ஏ.எல்., நிறுவனம் முதல் முறையாக விலக்கி வைக்கப்பட்டுள்ளது’ என, நம் ராணுவ செலயர் ஆர்.கே.சிங் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ