உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வேட்புமனு தாக்கல் இன்று துவக்கம்

வேட்புமனு தாக்கல் இன்று துவக்கம்

விக்ரம்நகர்:டில்லி சட்டசபைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று துவங்குகிறது.டில்லி சட்டசபைக்கு அடுத்த மாதம் 5ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே மொத்தம் உள்ள 70 தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியலை ஆளும் ஆம் ஆத்மி வெளியிட்டது.முக்கிய எதிர்க்கட்சியான பா.ஜ.,வும் 29 வேட்பாளர்களை கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டது. மீதமுள்ள 41 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இந்த வார இறுதிக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.டில்லி சட்டசபைத் தேர்தலை பொறுத்தவரையில் ஆளும் ஆம் ஆத்மி, பா.ஜ., காங்கிரஸ் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. அரசியல் கட்சிகள் ஏற்கனவே களமிறங்கி பிரசாரத்தை துவக்கிவிட்டன. பிரசாரம் மற்றும் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் தொடர்பான பல்வேறு பணிகளைக் கையாள 45க்கும் மேற்பட்ட தேர்தல் குழுக்களை மாநில பா.ஜ., அமைத்துள்ளது.சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு பெண்களுக்கான உதவித்தொகை உள்ளிட்ட வாக்குறுதிகளை ஆளும் ஆம் ஆத்மி அறிவித்தது. டில்லியில் ஆட்சிக்கு வந்தால் 25 லட்ச ரூபாய்க்கான சுகாதார காப்பீட்டுத் திட்டத்தையும் பெண்களுக்கான உதவித்தொகையையும் காங்கிரஸ் அறிவித்தது.ஆனால் இதுவரை தன் தேர்தல் அறிக்கையை பா.ஜ., இன்னும் அறிவிக்கவில்லை.இதுகுறித்து பா.ஜ., மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், “கட்சியின் தேர்தல் அறிக்கை கிட்டத்தட்ட தயாரிக்கப்பட்டு, தேசியத் தலைமையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் இது அறிவிக்கப்படும்,” என்றார்.இதற்கிடையில் 70 தொகுதிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று துவங்குகிறது. வருகிற 17ம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசிநாள்.

தேர்தல் நடைமுறை

வேட்புமனுத் தாக்கல் துவக்கம் 10.1.2025நிறைவு 17.1.2025பரிசீலனை 18.1.2025வாபஸ் 20.1.2025தேர்தல் தேதி 5.2.2025ஓட்டு எண்ணிக்கை 8.2.2025


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ