உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சூதாட்ட செயலிகளுக்கு விளம்பரம்: பிரகாஷ்ராஜ், விஜய் தேவரகொண்டா உள்ளிட்ட நடிகர்கள் மீது வழக்கு

சூதாட்ட செயலிகளுக்கு விளம்பரம்: பிரகாஷ்ராஜ், விஜய் தேவரகொண்டா உள்ளிட்ட நடிகர்கள் மீது வழக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஐதராபாத்: சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தியதாக பிரபல நடிகர்கள் பிரகாஷ்ராஜ், ராணா டகுபதி , விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகைகள் மஞ்சு லட்சுமி, நிதி அகர்வால் உள்ளிட்ட 25 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.நாடு முழுவதும் சூதாட்ட செயலிகளில் விளையாடி ஏராளமானோர் பணம் இழந்து வருகின்றனர். அதில், பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதனையடுத்து, அத்தகைய செயலிகளுக்கு விளம்பரம் தருவதையும், ஊக்கப்படுத்துவதையும் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த ஆண்டு சட்டவிரோத சூதாட்டம் மற்றும் பெட்டிங் செயலிகளுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவு அளிப்போர் மீது நடவடிக்கை எடுக்கும்படி நுகர்வோர் துறை அமைச்சகம் உத்தரவிட்டு இருந்தது. ஆன்லைன் மூலம் விளம்பரங்களுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=d09qqn0b&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில் சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தியதாக நடிகர்கள் தெலுங்கு பட நடிகர் ராணா டகுபதி, பிரகாஷ்ராஜ் , விஜய் தேவர கொண்டா, மற்றும் நடிகைகள் நிதி அகர்வால், மஞ்சு லட்சுமி , பிரனிதா, ஸ்ரீமுகி, வர்ஷினி சவுந்தர்ராஜா, வசந்தி கிருஷ்ணன், உள்ளிட்ட 25 பேர் மீது மத்திய அரசின் ஐடி சட்டப்பிரிவு 66டி, பிஎன்எஸ் சட்டப்பிரிவு 318(4), 112, 49 மற்றும் தெலுங்கானா மாநில விளையாட்டு சட்டப்பிரிவு 4 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. பனிந்திர சர்மா என்ற தொழிலதிபர் அளித்த புகாரின் அடிப்படையில் சைபராபாத்தின் மியாபூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

thangavel
மார் 20, 2025 22:38

kandippa thandanai tharanum kaasukkaaga edhaiyum seivadhu thapputhaane


கொங்கு தமிழன் பிரசாந்த்
மார் 20, 2025 19:53

நம்ம ரம்மி நாயகன் சரத் குமார் இருக்கார் மறந்துடாதீங்க. அவரையும் சேர்த்து உள்ள போடுங்க.


sridhar
மார் 20, 2025 19:51

இத விளம்பரம் பண்ண தொலைக்காட்சிக்கு என்ன தண்டனை தும்பை விட்டு வால புடிக்கற கத இதுதானே


Appa V
மார் 20, 2025 18:38

ஏதாவது ஒரு ஆட்டம் ஆடி காசு பாக்கணும் ..அது சூதாட்டமா இருந்த என்ன ..அல்லது


ஆரூர் ரங்
மார் 20, 2025 17:25

ஆன்லைன் ரம்மி ஒரு திறமையைக் காட்டும் விளையாட்டு. அதனைத் தடை செய்ய முடியாது என கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. எனவே அதன் விளம்பரங்களை தடை செய்ய வழியில்லை. அவை சட்டப்படி இயங்கும் வரை விளம்பரங்களை நிறுத்தவும் முடியாது. இந்த வழக்கு ட்ராமா–னு எல்லோருக்கும் புரியும்.


skrisnagmailcom
மார் 20, 2025 16:51

எந்த அயோக்யனா இருந்தாலென்ன மோதிக்குஎதிராக அவன் பேசினா திமுக அவனை கொண்டாடும் உ.ம் பிரகாஷ்ராஜ்


மூர்க்கன்
மார் 20, 2025 19:14

அப்படியே அங்க பார்த்துட்டு இங்கே திரும்புறானுங்களே?? ரம்மி முதலைகளை சந்தித்து சூதாட்ட செயலிகளை தடை செய்யும் சட்டத்திற்கு ஒப்புதல் கொடுக்காத மேதகு ஆளுநர்.


ragu
மார் 20, 2025 16:45

இவனையெல்லாம் தூக்கி ஜெயில்ல போட்டு களி தின்ன உடுங்க


अप्पावी
மார் 20, 2025 16:42

சூதாட்ட செயலிகளை அனுமதிச்சு ஜி.எஸ்.டி உருவும்அரசு மீது ஒரு வழக்கும் கிடையாது.


ஆரூர் ரங்
மார் 20, 2025 17:22

திறன் சார்ந்த ஆன்லைன் போட்டிகளுக்கு தடைவிதிக்க அரசியல் சட்டத்திலேயே இடமில்லை. குதிரைப் பந்தயம் நடத்த மாநில அரசுகள் அனுமதிப்பது ஏன்?. அதே காரணம்தான்.


Sampath Kumar
மார் 20, 2025 16:26

நடிகர்களை பிடித்து போட்டால் போதுமா ?/ அந்த செயலிகளை ஒளிபரப்ப அனுமதி கொடுத்து துட்டுப்பார்க்கும் தொல்லை காட்சிக்கும் அனுமதி கொடுத்த அரசுமீதும் உங்க சட்டம் பாயுமா ?


இளந்திரையன் வேலந்தாவளம்
மார் 20, 2025 16:17

ரம்மி(பிரகாஷ்) ராஜ்... நாக்கு மட்டும் நாலூருக்கு நீளும்... இவர புடிச்சு உள்ளே போடுங்க மைலாட்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை