உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி பா.ஜ., அலுவலகத்தில் தீ விபத்து: யாருக்கும் பாதிப்பில்லை

டில்லி பா.ஜ., அலுவலகத்தில் தீ விபத்து: யாருக்கும் பாதிப்பில்லை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியில் உள்ள மாநில பா.ஜ., அலுவலகத்தில் தீவிபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மின்கசிவு காரணமாக ஏற்பட்ட இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.டில்லியின் பண்டிட் பன்ட் மார்க் பகுதியில் டில்லி பா.ஜ., அலுவலகம் செயல்படுகிறது. மாலை 4:25 மணியளவில் இங்கு தீவிபத்து ஏற்பட்டது. இது குறித்து, தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து நிகழ்வு இடத்திற்கு 3 வாகனங்களில் வந்த தீயணைப்பு துறையினர், ஒரு சில நிமிடங்களில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.மின்மீட்டர் அருகே மின்கசிவு ஏற்பட்டதால், தீவிபத்து ஏற்பட்டதாக பா.ஜ., வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து உள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

சந்திரன்
மே 17, 2024 16:10

என்னத்தப்.போட்டு எரிக்கிறாங்களோ?


Narayanan Muthu
மே 16, 2024 19:15

போகிற போக்கை பார்த்தால் இவனுங்க பண்ணியிருக்கிற வேலைக்கு தில்லியே தீ பிடித்து எரியும் போலுள்ளது


Syed ghouse basha
மே 16, 2024 17:52

பஜக ஆட்சியின் இறுதிகாலத்தில் அலலுவலகங்களில் தீ பிடிப்பது ஆட்சியின் கடைசி காலத்தை காட்டுகிறது


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி