உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கோழிக்கோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீ; 4 பேர் பலி; விசாரணைக்கு உத்தரவு

கோழிக்கோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீ; 4 பேர் பலி; விசாரணைக்கு உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: கோழிக்கோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தால் ஏற்பட்ட புகைமூட்டத்தில் மூச்சு திணறி 4 பேர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்ட நோயாளிகள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டனர்.கேரளா மாநிலம், கோழிக்கோட்டில் மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் மின்கசிவு காரணமாக நேற்றிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவமனை முழுவதும் புகைமூட்டம் சூழ்ந்தது. இதனால் சிகிச்சை பெற்று வந்த 4 பேர் மூச்சுதிணறி உயிரிழந்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=bafhrf0b&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மேலும் சிகிச்சை பெற்று வந்த 200க்கும் மேற்பட்டோர் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இது குறித்து எம்.எல்.ஏ., சித்திக் கூறியதாவது: தற்கொலை முயற்சி மேற்கொண்டு மருத்துவமனையில் னென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த வயநாடு மாவட்டத்திற்கு உட்பட்ட கல்பேட்டா மெப்படி பகுதியை சேர்ந்த நசீரா,24, உயிரிழந்தார்.மருத்துவமனையில் தீ விபத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்யும் பணி நடக்கிறது, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

சுந்தரம் விஸ்வநாதன்
மே 03, 2025 10:33

அதெப்படி சார் , எந்த கட்டிடத்துல தீ விபத்து நடந்தாலும் , நொடிப்பொழுதுல மின்கசிவுதான் காரணம்ன்னு கண்டுபிடிக்கறாங்க?


Svs Yaadum oore
மே 03, 2025 07:41

இதுபோன்ற மற்றொரு சம்பவம் சமீபத்தில் திண்டுக்கல்லில் தனியார் மருத்துவமனையில் நடந்தது ....6 நபர்கள் பலி....4 நபர்கள் பலத்த தீ காயம் ....இந்த மருத்துவமனைகள் எந்த பாதுகாப்பு விதிமுறையும் பின்பற்றுவது கிடையாது ...


Svs Yaadum oore
மே 03, 2025 07:32

மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தால் மூச்சு திணறி 4 பேர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்ட நோயாளிகள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டனராம் .......இதெல்லாம் படிக்காத ஹிந்திக்காரன் வடக்கன் மாநிலத்தில்தான் இப்படி நடக்கும் ....மலையாளி படித்து முன்னேறிய விடியல் மாநிலம் ....அங்கே இது போல நடக்காது ....