நள்ளிரவில் லக்னோ அரசு மருத்துவமனையில் திடீர் தீ; பீதியில் அலறிய நோயாளிகள்
லக்னோ: லக்னோ அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தை தொடர்ந்து நோயாளிகள் அலறினர்.உ.பி. மாநிலம் லக்னோவில் அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந் நிலையில் நேற்றிரவு மருத்துவமனையின் 2வது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதையறிந்த நோயாளிகள் அச்சத்தில் அலறினர். தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தனர். அங்கிருந்த 200க்கும் மேற்பட்ட நோயாளிகளை பாதுகாப்பாக மீட்டு வேறு பிரிவுகளுக்கு அனுப்பி வைத்தனர்.சம்பவம் குறித்து மருத்துவமனையின் துணை முதல்வர் பிரஜேஷ் பதக் கூறியதாவது; 2வது மாடியில் இருந்து புகை வந்துள்ளளது. உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் தீயை கட்டுப்படுத்தினர்.உடனடியாக நோயாளிகளை வெளியேற்றும் பணி தொடங்கியது. மொத்தம் 200 நோயாளிகள் பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்டனர். தீ விபத்தில் யாருக்கும் காயம் இல்லை. தீ விபத்துக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.