உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மஹா கும்பமேளாவில் மீண்டும் தீ விபத்து; வாகன நிறுத்தம் பகுதியில் பரபரப்பு

மஹா கும்பமேளாவில் மீண்டும் தீ விபத்து; வாகன நிறுத்தம் பகுதியில் பரபரப்பு

பிரயாக்ராஜ்; உ.பி., கும்பமேளாவில் மீண்டும் தீ விபத்து நிகழ்ந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரயாக்ராஜில் கடந்த 13ம் தேதி மஹா கும்பமேளா நிகழ்வு தொடங்கியது. இந்த மேளா பிப்.26ம் தேதி நிறைவு பெறுகிறது. கும்பமேளாவைத் தொடர்ந்து நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். சில நாட்கள் முன்பு கும்பமேளாவின் ஒரு பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு 18 கூடாரங்கள் எரிந்து சேதம் அடைந்தன. எந்த உயிர்ச்சேதமும் நிகழவில்லை. இந் நிலையில், பிரயாக்ராஜில் இன்று மீண்டும் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. கும்பமேளா செல்லும் பிரதான சாலையில் உள்ள வாகன நிறுத்தத்தில் அதிகாலை 6.30 மணியளவில் இந்த தீ விபத்து நிகழ்ந்துள்ளது. அங்கிருந்த 2 வாகனங்களில் தீ பரவியதால் திடீர் பரபரப்பும், பீதியும் நிலவியது. சம்பவத்தை அறிந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் எவ்வித உயிர்ச்தேமும் ஏற்படவில்லை. தொலைதூரத்தில் இருந்து வாகனங்கள் வருவதால் என்ஜினில் அதிக சூடு ஏற்பட்டு, தீ விபத்து நிகழ காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

V வைகுண்டேஸ்வரன்
ஜன 25, 2025 12:25

Unquote: To தி மலர் ஆசிரியர் குழு :: கிட்டத்தட்ட 17 ஆவது முறை இதைப் பதிவிடுகிறேன். முடிந்தால் பிரசுரிக்கவும் : Quote: "எங்கே எந்த நிகழ்வு செய்தி வந்தாலும், திராவிட மாடல், திமுக, இவர்களைத் தாண்டி சிந்திக்கவே இயலாத அளவுக்கு பலருக்கும் மூளை பாதிக்கப்பட்டு விட்டது போல " பரிதாபங்கள் ".// Unquote: ஏன் சார், அப்படியே ஏதோ சமூக விரோதி கள் செயலாக கருதினாலும், எதுக்கு மெனக்கெட்டு திமுக செய்யப் போகுறது?? யோகிக்கும் திமுக வுக்கும் ஸ்னானப் பிராப்தி கூட கிடையாது. தமிழ் நாடா இருந்தால், "போலீஸ் என்ன புடுங்குது" என்று எழுத வேண்டியது. கும்ப மேளாவில் விபத்து நடத்தினால் யோகிக்கு ஓட்டு போட மாட்டார்களா? எழுதும் போதே முட்டாத்தனமா தெரியல??


Ganapathy
ஜன 25, 2025 11:14

கள்ளிக்குடி துலுக்க வந்தேறிகளும் இஸ்லாமிய கம்மி அடிவருடி சமாஜ்வாதி காங்கிரஸும் செய்யும் சதி இது. பழியை மோதி யோகி மீது போட முயற்சி. ஸனாதனிகளின் பிணத்திற்காக வெயிட்டிங். திமுக கூட்டணியாச்சே.


V வைகுண்டேஸ்வரன்
ஜன 25, 2025 12:26

யோகிக்கும் திமுக வுக்கும் ஸ்னானப் பிராப்தி கூட கிடையாது. தமிழ் நாடா இருந்தால், "போலீஸ் என்ன செய்யுது" என்று எழுத வேண்டியது. கும்ப மேளாவில் விபத்து நடத்தினால் யோகிக்கு ஓட்டு போட மாட்டார்களா? எழுதும் போதே முட்டாத்தனமா தெரியல??