உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜம்முவில் தீ: 6 பேர் பலி

ஜம்முவில் தீ: 6 பேர் பலி

ஜம்மு, ஜம்மு - காஷ்மீரில் கதுவா பகுதியில் முன்னாள் உதவி எஸ்.பி., அவதார், 81, தன் குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று அதிகாலை இவரது வீடு முழுக்க தீப்பற்றி எரிவதை அக்கம்பக்கத்தினர் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.தகவலறிந்து வந்த போலீசார், மீட்புக் குழுவினரின் உதவியுடன் வீட்டிற்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, தீ விபத்தால் வீடு முழுக்க புகைமூட்டம் ஏற்பட்டது. இதன் காரணமாக, வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த 10 பேரும் மயங்கி விழுந்தனர். போலீசார் அவர்களை மீட்டு, அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். டாக்டர்கள் பரிசோதித்ததில், வரும் வழியிலேயே ஆறு பேரும் இறந்தது தெரிய வந்தது. இறந்தவர்கள், அவதார், அவரது மகள் பார்கா, 25, பேரன் தாகஷ், 3, கங்கா பாகத், 17, தானிஷ் பாகத், 15, ஆத்விக், 6, என தெரிய வந்தது. இதேபோல், அவதாரின் மனைவி சுவர்ணா உட்பட நான்கு பேர் லேசான தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி