உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கோழிக்கோடு அருகே நடுக்கடலில் சரக்கு கப்பலில் தீ விபத்து; 4 பேர் மாயம்

கோழிக்கோடு அருகே நடுக்கடலில் சரக்கு கப்பலில் தீ விபத்து; 4 பேர் மாயம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோழிக்கோடு: கேரள மாநிலம் கோழிக்கோடு - கண்ணூர் துறைமுகங்களுக்கு நடுவே, சரக்கு கப்பல் ஒன்று நடுக்கடலில் தீப்பற்றிக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து கடந்த ஜூன் 7ம் தேதி புறப்பட்ட சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தின் சீன சரக்கு கப்பல், நாளை மும்பையை சென்றடைய உள்ளது. இந்த நிலையில், கேரளாவின் பேய்பூர் கடல் பகுதியில் இருந்து வடக்கே 70 கடல் மைல் தொலைவில் இந்தக் கப்பல் சென்று கொண்டிருந்த போது திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=wqqhtwwg&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து கொச்சியில் உள்ள கடல் கண்காணிப்பு மையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, இந்திய கடற்படையினரும், கடலோர காவல் படையினரும் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், கொச்சி, பேய்பூரில் இருந்து 3 படகுகளில் மேலும் சில கடலோர காவல்படை வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்தக் கப்பலில் 22 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்களில் 4 பேர் மாயமான நிலையில், 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். மாயமானவர்களை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. ஏற்கனவே, கடந்த மே மாதம் 24ம் தேதி கொச்சி அருகே கடலில் லைபீரியா நாட்டின் சரக்கு கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால், நீரில் அடித்துச் செல்லப்பட்ட கன்டெய்னர்களில் இருந்த எண்ணெய் தண்ணீரில் கலந்து மாசை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நடந்த இரு வாரங்களில் மற்றொரு சரக்கு கப்பல் விபத்துக்குள்ளாக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜூன் 09, 2025 17:46

யப்பா முடியல. சரியாக நிர்வகிக்காமல் சும்மா கடல்நீரை கப்பலுக்குள் ஊற்றினால் நீர் நிரம்பிய பாத்திரம் போல கப்பலும் மூழ்கிவிடும். அப்புறம் மிகப்பெரும் பரப்பளவு உள்ள கப்பலில் ஏதோ ஒரு மூலையில் ஏற்படும் தீ வெகுவாக பரவிய பின்னரே தெரியவரும். கப்பல்களில் இருக்கும் ஊழியர்களும் பெரும்பாலும் அறைகளிலும், கண்ட்ரோல் ரூம்களிலுமே இருப்பார்கள். இப்போது ஏற்பட்டிருப்பது விபத்து. அதை சமாளிக்க கப்பலில் இருப்பவர்களால் மட்டும் முடியாது. முன்னரே திட்டமிட்ட சாதியாக இல்லாமல் இருக்க இறைவனை வேண்டுவோம். சிலர் உயிர் இழந்திருக்கக்கூடும் என்ற செய்தியிலிருந்து பிரச்சனை பெரிது என்று மட்டும் புரிகிறது.


sundarsvpr
ஜூன் 09, 2025 14:53

நெருப்புக்கு எதிரி நீர். கடலில் நீர் அதிகம் இதனை கொண்டு ஏன் உடன் அணைக்கமுடியவில்லை படைத்தல் காத்தல் அழித்தல் தவிர மற்ற எல்லாவற்றையும் ஜீவன் செய்திட இயலும். விதிக்கு புறம்பாய் எதுவும் செய்திட இயலாது. தீ விபத்து விதிக்கபட்டதில் ஓன்று. நம்மால் அறியமுடியாது. .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை