உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஓடும் காரில் தீ போக்குவரத்து நெரிசல்

ஓடும் காரில் தீ போக்குவரத்து நெரிசல்

மஹிபால்பூர்: மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்தது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.தென்மேற்கு டில்லியில் உள்ள மஹிபால்பூர் மேம்பாலத்தில் நேற்று முன் தினம் மாலை கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இன்ஜின் பகுதியில் இருந்து புகை வந்ததால், காரை ஓட்டிச் சென்றவர் கீழே இறங்கி தப்பிவிட்டார்.சிறிது நேரத்தில் கார் முழுதும் தீப்பிடித்து எரிந்தது. இந்தச் சம்பவத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக கார் தீப்பிடித்து எரிந்ததாக போலீசார் தெரிவித்தனர்.சம்பவ இடத்தில் கார் உரிமையாளரை காணவில்லை. கார் உரிமையாளரை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ