உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அந்தப் பேச்சுக்கே இடமில்லை; பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி காட்டிய பிடிவாதம்

அந்தப் பேச்சுக்கே இடமில்லை; பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி காட்டிய பிடிவாதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காசான்: தீவிரவாதத்தை தடுப்பதில் இரட்டை நிலைப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்துள்ளார். 16வது பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ரஷ்யா சென்றுள்ளார். காசான் நகரில் நடந்த இந்த மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, மேற்கு ஆசியா மற்றும் உக்ரைனில் நடந்து வரும் மோதல்களை முடிவுக்கு கொண்டு வருவதை வலியுறுத்தி பேசினார். அவர் பேசியதாவது: இந்தியா போரை ஆதரிக்கவில்லை. பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதையே நாங்கள் விரும்புகிறோம். தீவிரவாத தாக்குதல்களுக்கும், தீவிரவாத செயல்களுக்காக நிதி திரட்டுவதையும் தடுக்க உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும். இந்த விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு என்ற பேச்சுக்கே இடமிருக்கக் கூடாது. இளைஞர்களை தீவிரவாத செயல்களுக்காக ஈர்ப்பதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்வதேச தீவிரவாதத்தை ஒழிப்பது குறித்த ஐ.நா.,வின் விரிவான மாநாட்டில் நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். பணவீக்கம், உணவு பாதுகாப்பு, சைபர் அச்சுறுத்தல்கள் உள்ளிட்டவை சர்வதேச சவால்களாக இருந்து வருகின்றன. எனவே, இந்த விவகாரங்களில் அனைத்து நாடுகளும் கவனம் செலுத்த வேண்டும். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், பலதரப்பு வளர்ச்சி வங்கிகள் (எம்.டி.பி.,) மற்றும் உலக வர்த்தக அமைப்பு (டபுள்யூ.டி.ஓ.,) உள்ளிட்ட உலகளாவிய நிறுவனங்களை மறுசீரமைக்க பிரிக்ஸ் மாநாட்டு உறுப்பு நாடுகள் குரல் கொடுக்க வேண்டும், என வலியுறுத்தினார். இந்தக் கூட்டத்தை தொடர்ந்து, சீன பிரதமர் ஜின்பிங்கை பிரதமர் மோடி சந்தித்த பேச திட்டமிட்டுள்ளார். 5 ஆண்டுகளுக்குப் பிறகு இருநாட்டு தலைவர்கள் சந்தித்து பேசுவது இது முதல்முறையாகும். எல்லையில் சீன வீரர்கள் அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்த விவகாரத்தில் இரு நாடுகளிடையே மோதல் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

saravanan
அக் 23, 2024 21:32

பிரிக்ஸ் என்ற சொல்லே ஆங்கிலத்தில் செங்கல்லை குறிக்கும் பிரிக்ஸ் தலைவர்கள் எல்லாம் இணைந்து கோட்டை கட்டுவார்களா அல்லது கூடி பிரிவார்களா என்பது சம்பந்தப்பட்ட உறுப்பு நாடுகளின் செயல்பாடுகளை வைத்தே முடிவு செய்ய முடியும் ஐநா பாதுகாப்பு சபையில் நாம் நிரந்தர உறுப்பினராக பெரும்பாலான நாடுகள் ஆதரவு தருகின்ற நிலையில் முட்டுக்கட்டையாக இருப்பது சீனா. தற்போது சீனா நம்மிடம் நேசக்கரம் நீட்ட காரணம் மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான நிலையான அரசு, அந்த ஸ்திரத்தன்மையால் நாம் காணும் பொருளாதார வளர்ச்சி மற்றும் ராணுவ அணுகுமுறை போன்றவை சீனாவிற்கு இந்திய சந்தை தவிர்க்க முடியாதது. முஸ்தீபுகளெல்லாம் வேலைக்கு உதவாது என்பதை உணர்ந்து கொண்ட சீனா இப்போது நட்பை மீண்டும் துளிர்க்க வைக்க பார்க்கிறது. இந்தியாவின் நீண்ட நாளைய குறிக்கோள்களை அடைய சீனா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்


Suresh
அக் 24, 2024 05:17

Very good point. Nice analysis!


தாமரை மலர்கிறது
அக் 23, 2024 20:36

காங்கிரஸ் காலத்தில் இந்தியாவில் கொளுத்துபோயிருந்த தீவிரவாதிகளை அடித்து ஒடுக்கியவர் மோடி.


சாண்டில்யன்
அக் 23, 2024 20:26

எல்லையில் சீன வீரர்கள் அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்தனரா? அதில் ஜின் பிங்குக்கு துளியும் சம்பந்தமில்லையா என்ன உளறல்


M Ramachandran
அக் 23, 2024 20:22

தீவிரவாதிகளை ஆட்டுவிக்கும் தலை வர்கள் நன்றாக கொழுத்து பண முதலைகள் ஆகி வருகிறார்கள். அறியா இளம் வயதினரை மதம் என்ற போர்வையில் தவறான வழிக்கு அவர்களை நடத்தி அவர்கள் உயிர்களையும் அப்பாவி உயிர்களையும் பலிகடா ஆக்கு கிறார்கள். இதைய்ய காட்டி பல வளைகுடா நாடுகளிடம் வசூலித்து சொர்க்க சுக போக வாழ்க்கையயை நடந்து கிறார்கள்.


raja
அக் 23, 2024 18:54

சீனர்களை பிரதமர் மோடி நம்பவே கூடாது ..முதுகில் குத்துபவர்கள் .. முன்பு இப்படி டீ சாப்ட்டு கொண்டே கல்வான் பள்ளத்தாக்கை ஆட்டைய போட பார்த்தார்கள்..இந்திய வீரர்களும் போரிட்டு ஜெயித்து வீர மரணம் அடைந்ததை மறந்து விட கூடாது...


har
அக் 23, 2024 18:28

அப்பாவி..உன்னை எந்த ரகத்தில் சேர்க்க... சுய அறிவோடு கருத்து போடும் பழக்கம் இல்லையோ


Anand
அக் 23, 2024 19:04

மூர்க்கன் எந்த காலத்திற்கும் சுயநினைவோடு இருந்ததில்லை, கூடவே உண்ட வீட்டிற்கும் ரெண்டகம் நினைப்பான்.


அப்பாவி
அக் 23, 2024 17:18

எல்லையில் நடந்த சண்டையெல்லாம் மக்கள் மறந்துட்டாங்க. இனிமே ஜாலியா டீ குடிச்சு பேசலாம். அடுத்த வருசம் சீனாவுக்கே போகலாம். இதையே காங்கிரஸ் செஞ்சாத்தான் தேஷ் துரோகம்.


Thiyagarajan S
அக் 23, 2024 18:27

உன்னைப்போன்ற அறிவிலி யாரும் இருக்க மாட்டார்.


N Sasikumar Yadhav
அக் 23, 2024 18:37

அப்பாவி என்கிற பெயரில் ஒரு தீயமுக 200 ரூபாய் ஊ...பிஸ் விஷத்தை தேசத்திற்கு எதிராக கக்குகிறது


HoneyBee
அக் 23, 2024 20:24

உன் அப்பாவித்தனம் ரொம்ப நல்லது. கட்டாயம் ₹200 குவார்ட்டர் பிரியாணி பெற்று வரும்


Ashok Subramaniam
அக் 23, 2024 20:46

அப்பாவியா நீ.... அடப் பாவி.. பாரதம் முதன் முறையாக அனைத்துலக அளவில் ஒரு சிறந்த இராசதந்திரியாகச் செயல்பட்டு வருகிறது தங்கள் குடும்ப வளத்துக்காக நாட்டின் பெருமையை, வளங்களை விற்றது காங்கிரஸ் குடும்பங்கள். கலாச்சார சீரழிவை முன்னின்று அரங்கேற்றின காங்கிரஸும், தீய திராவிடச் சுயநலக் கட்சிகளும்.. இதற்கு உம்மைப் போன்ற முட்டுக்கொடுக்கும் உபீஸூம்.. ரொம்ப புத்திசாலித்தனமாகக் கருத்திடுவதாக எண்ணம் வேறு


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 23, 2024 21:38

நாமெல்லாம் பதில் சொல்வதால் தலைக்கனம் ஏறுது ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை