உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முதலிரவு வீடியோ மிரட்டல்; மின்வாரிய அதிகாரி மீது வழக்கு

முதலிரவு வீடியோ மிரட்டல்; மின்வாரிய அதிகாரி மீது வழக்கு

ராய்ச்சூர் : வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதுடன், முதலிரவு வீடியோவை வெளியிடுவேன் என்று கூறி, மனைவியை மிரட்டிய கெஸ்காம் அதிகாரி மீது வழக்குப் பதிவாகி உள்ளது.ராய்ச்சூர், மான்வியின், 'கெஸ்காம்' மின்வாரிய அலுவலக மேற்பார்வையாளர் குருராஜ், 40. இவருக்கு, திருமண வலைதளம் மூலம் 34 வயது பெண்ணுடன், இரண்டு ஆண்டுகளுக்கு முன் பழக்கம் ஏற்பட்டது. மொபைல் போனில் இருவரும் பேசினர். பிடித்து போனதால், பெற்றோர் சம்மத்துடன் திருமணம் செய்தனர். திருமணத்தின் போது குருராஜிக்கு, நகை, பணத்தை பெண் வீட்டார் வரதட்சணையாக கொடுத்தனர்.கடந்த சில மாதங்களாக கூடுதலாக வரதட்சணை வாங்கி வரும்படி, மனைவியை குருராஜ் கொடுமைப்படுத்தி உள்ளார். அதற்கு மனைவி மறுத்து உள்ளார். 'நமது முதலிரவு வீடியோ, நாம் இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படங்களும் உள்ளது. வரதட்சணை வாங்கி வராவிட்டால், அவற்றை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன்' என்று மனைவியை, குருராஜ் மிரட்டி உள்ளார்.மேலும் சில பெண்களிடமும், குருராஜ் ஆபாசமாக வீடியோ காலிலும் பேசி உள்ளார். மனம் உடைந்த மனைவி, குருராஜ் மீது மான்வி போலீசில், நேற்று முன்தினம் புகார் செய்தார். குருராஜ் மீது வழக்கு பதிவானது. தலைமறைவாக உள்ள அவரை போலீஸ் தேடுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ