உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காந்தி, பாரதியார்,மோடியை சுமப்பதில் பெருமை ; கேரள மீனவர் புதுமை

காந்தி, பாரதியார்,மோடியை சுமப்பதில் பெருமை ; கேரள மீனவர் புதுமை

திருவனந்தபுரம்: மகாத்மா காந்தி, சுப்பிரமணி கவி பாரதியார், பிரதமர் மோடி உள்ளிட்ட பல தலைவர்கள் உருவப்படங்களை தன் உடலில் பச்சை (tattoos) குத்தி வாழும் கேரள மீனவர் ஒருவர் மீடியாக்களில் பரபரப்பாக பேசப்படும் நபராகி உள்ளார்.பணம் சம்பாத்யம் செய்து, தங்களின் தேவைகள் வாங்க வேண்டும் என ஒவ்வொருவருக்கும் பலவிதமான ஆசைகள், கற்பனைகள் இருக்கலாம். ஆனால் மீனவர் ஒருவர் நாட்டிற்காக உழைத்த தலைவர்கள் மீது பாசம் கொண்டு அவர் புதுமையாக சிந்தித்துள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரம் விழிஞ்சம் அருகே முக்கோலா பகுதியை சேர்ந்த மீனவர் ஜான் 45 . இவர் ஏழை மீனவ குடும்பத்தை சேர்ந்தவர். இவர் தனது மீன்பிடி மூலம் வந்த வருமானத்தை ஒரு லட்சம் வரை சேர்த்து வைத்துள்ளார். இவரது நீண்ட கால ஆசையான பச்சை (tattoos) குத்துவதற்கு இந்த பணத்தை செலவழித்தார். அதிலும் இந்த நாட்டிற்கு தியாகம் செய்த மகாத்மா காந்தியின் படம் மார்பின் இடது புறத்திலும் , வலது புறத்தில் சுப்பிரமணி பாரதியார், வயிற்று பகுதியில் பிரதமர் மோடி, வலது கையில் அம்பேத்கர், மறைந்த அப்துல்கலாம், சுபாஷ்சந்திரபோஸ், பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது நடத்திய ஆபரேஷன் சிந்தூர் என்ற அதிரடி தாக்குதலை முன் நின்று வெற்றிகரமாக நடத்திய பெண் ராணுவ கமாண்டர்கள் ஷோபியா குரேஷி, வியோமிகாசிங் ஆகியோரது படங்களையும் வரைந்துள்ளார். அந்தந்த படங்களின் கீழ் அவரவர்களது பெயர்களையும் பதித்துள்ளார். மறைந்த அப்துல் கலாம் படம் பச்சை குத்த ஒரு மாதம் காலம் பிடித்தது என்றும் இந்நேரத்தில் 2 முறை மயங்கி விழுந்தேன் என்கிறார் ஜான். இது குறித்து மீனவர் ஜான் கூறுகையில்;நாட்டு தலைவர்களுக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் நான் இவ்வாறு உடலில் டாட்டு வரைந்துள்ளேன். இது எனக்கு மகிழ்வு, விளம்பரத்திற்காக அல்ல. யாரிடமும் காட்ட வேண்டும் என்ற எண்ணமும் இல்லை. ஆடை அணிந்தபடி தான் வெளியே செல்கிறேன் யாருக்கு தெரியும் ? என்று கேட்கிறார் இவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

hasan kuthoos
ஜூலை 28, 2025 14:15

எல்லா பேரும் சரிதான் , ஒருவரை தவிர


Pandi Muni
ஜூலை 28, 2025 15:57

ஏன்? வெளியேறு இயக்கமா தொடங்கியிருக்காரு?


T MANICKAM
ஜூலை 28, 2025 13:54

தங்களின் எண்ணம் வண்ணமாக தலைவர்களை வைத்துள்ளீர்கள் வாழ்த்துகள்.


நாயர்
ஜூலை 28, 2025 12:26

ஒரு தம்பிடி கூட முன்னேற மாட்டே...


vivek
ஜூலை 28, 2025 13:09

நாயர் ....நீ எப்படி முன்னேறினார் என்று விளக்கலாமே


M Ramachandran
ஜூலை 28, 2025 11:39

இப்போது தான் கம்யூனிச மாயையிலிருந்து கேரளமக்கள் வெளி வந்துகொண்டிருக்கிறார்கள்.


Krishna
ஜூலை 28, 2025 11:37

இந்த தேச பற்றுள்ள மாமனிதர் நீடூழி வாழ்க.உடலை கஷ்டபடுத்திகொண்டு தேசிய வசதிகளுக்காக தனது உடலையே அர்ப்பணித்துள்ள உங்களை சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்கிறேன். நன்றி. வணக்கம்


தஞ்சை மன்னர்
ஜூலை 28, 2025 11:37

பேர்படி நபரை மட்டும் பச்சை குத்தி கொண்டால் சந்தேகம் வரும் எத்தனை வருடத்திற்கு காண்ட்ராக்ட் எவ்வளவு payment என்று சர்ச்சை வரும் இப்படி கூட இரண்டு பேரை குத்தி கொண்டால் சந்தேகம் வராது பாருங்க ?? மலையாளி ஹி ஹி பாரதி காமெடியாக இருக்கு "" கேரள மீனவர் புதுமை " இதில் புதுமை என்ன இருக்கு பத்தாம்பசலி தனத்தை தனக்கு தானே புதுமை என்று நினைத்து கொள்ளவேண்டியது தான் சோம்பு அடிக்க வேண்டியது அதற்க்காக இப்படியா ஐயோ ஐயோ


Pandi Muni
ஜூலை 28, 2025 16:00

வெறும் 200 ஓவாய்க்கு கூப்பாடு போடலையா அது மாதிரி இருக்குமோ


முக்கிய வீடியோ