உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மீனவர்கள் கைது லோக்சபாவில் தி.மு.க., கோஷம்

மீனவர்கள் கைது லோக்சபாவில் தி.மு.க., கோஷம்

புதுடில்லி : லோக்சபாவில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்து, தி.மு.க., - எம்.பி.,க்கள் முழக்கங்கள் எழுப்பினர்.அப்போது தி.மு.க., - எம்.பி., கனிமொழி பேசுகையில், “தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் துன்புறுத்தப்பட்டு கைது செய்யப்படுகின்றனர்; 97க்கும் மேற்பட்டோர், அந்நாட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். “மீன்பிடி படகுகளை இலங்கை பறிமுதல் செய்துள்ளதால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதில், மத்திய அரசு தலையிட்டு நிரந்தர தீர்வு காண வேண்டும்,” என்றார்.தொடர்ந்து, இந்த பிரச்னையை வலியுறுத்தி, பார்லி., வளாகத்தில், தி.மு.க., - எம்.பி.,க்கள் தலைமையில், 'இண்டி' கூட்டணியைச் சேர்ந்த எம்.பி.,க்கள் போராட்டம் நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

sankar
பிப் 09, 2025 07:32

கச்சத்தீவை தாரைவார்த்து விட்டு நீங்கள் அல்வா கொடுக்க வேண்டாம்


Visu
பிப் 08, 2025 14:59

மெத் தனமா வியாபாரம் ஆகுதுபோல அதான் பொங்கிட்டாங்க


ஆரூர் ரங்
பிப் 08, 2025 13:02

அறிவாலயத்தில் அன்னியர் நுழைய முயற்சித்தால் என்ன நடக்கும்?. மீன் திருடர்களுக்கும் அதேதான் நடக்கிறது.


Visu
பிப் 08, 2025 12:21

இந்த மூஞ்சியெல்லாம் போடாதிங்க


Venkateswaran Rajaram
பிப் 08, 2025 11:10

இளம் விதவைகள் தமிழ்நாட்டில் அதிகம்


ram
பிப் 08, 2025 10:47

டெல்லியில் கூவுவதற்கு ஒரு ஆளு அவ்வளவுதான், இந்த திராவிட ஆட்கள் குழந்தையும் கிள்ளி விடுவார்கள் தொட்டிலையும் ஆட்டுவார்கள், கச்ச தீவை தாரை வார்த்து விட்டு பேச்சை பாரு.


Anand
பிப் 08, 2025 10:42

ஏன் அண்ணா பல்கலைக்கழக மாணவி கற்பழிப்புக்கு கோஷம் போடவில்லை, வேங்கைவயல் சம்பவத்திற்கு கோஷம் போடவில்லை, தமிழ்நாட்டில் ஆங்காங்கே பள்ளி மாணவிகள் உட்பட பல பெண்கள் கற்பழிக்கப்படுவதற்கு கோஷம் போடவில்லை, கொலை கொள்ளைகளுக்கு கோஷம் போடவில்லை இதற்கு மட்டும் கோஷம் போடுவது ஏன்? மூஞ்சியும் மொகரக்கட்டையும்.


shyamnats
பிப் 08, 2025 10:37

அப்பா, கச்ச தீவை தாரை வார்ப்பார், மகள் பாராளுமன்றத்தில் ஒன்றுமே அறியாதது போல் வந்து ஆர்ப்பாட்டம், கூச்சல் போடுவார். தனயன் தமிழ் நாட்டில் தேனும் பாலும் ஓடுகிறது என்று கூசாமல் மேடைக்கு மேடை அறிவித்து கொண்டிருக்கிறார். எப்படித்தான் இவர்களால் முடிகிறதோ ? 2026 லும் மக்கள் இலவசங்களுக்கு ஆசைப்பட்டால் துன்பங்களை தவிர்க்க முடியாது.


panneer selvam
பிப் 08, 2025 10:22

Kanimozhli ji , how long this family drama to shout for every issue with central even though d by your family . Why do not you advise Rameswaram / Cuddalore fishermen not to trespass into Sri Lankan water . It is our fishermen mistake. Do you know arrest of Tamil Nadu fishermen by Pakistan ? Are you aware of it ?? Why cannot shout against Pakistan or you are afraid of losing Muslim votes ? Use your common sense.


Palanisamy T
பிப் 08, 2025 13:09

What do u mean by trespass? If what u say is correct, then Tamilnadu fishermen previously had been trespassing for centuries. And when & why did it become Sri Lankan waters? U need to clarify


Shekar
பிப் 08, 2025 09:36

நம் கடல் எல்லை சுருங்கியதற்கு, வழக்குகளில் இருந்து தப்பிக்க கச்சத்தீவு விஷயத்தில் இவருடைய அப்பா போட்ட கொடைவள்ளல் நாடகம் ஒரு காரணம்


Palanisamy T
பிப் 08, 2025 13:30

கடைசியில் உண்மை வெளிவருகின்றது . ஊழல் வழக்குகள் உண்மையென்றால் மத்திய அரசு அவர்கள் மேல் ஏன் வழக்குகள் போடவில்லை. அதற்க்காக சம்பந்தமில்லாமல் இந்திய நாட்டிற்கு சொந்தமான தீவை தமிழக அரசோடும் மீனவர்களோடும் கலந்துரையாடல் செய்யாமல் தாரை வார்த்துக் கொடுப்பது - - கொஞ்சமும் நினைத்துப் பார்க்க முடியவில்லை அப்போது அங்கே என்ன நடந்தது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை