மேலும் செய்திகள்
அரசு பள்ளி 10ம் வகுப்பு மாணவர்கள் மீது தாக்குதல்
23-Feb-2025
துமகூரு: அரசு பள்ளியில் உள்ள மாணவியர் கழிப்பறை மீது தாக்குதல் நடத்திய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.துமகூரு, சிக்கநாயக்கனஹள்ளி தாலுகா ஹூலியார் அரசு பள்ளியில் உள்ள மாணவியர் கழிப்பறையின் மீது, நேற்று முன்தினம் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் கற்களை வீசி தாக்கினர்.இதை பார்த்த 10ம் வகுப்பு மாணவர் யஷ்வந்த், “ஏன் இப்படி செய்கிறீர்கள்?” என தட்டிக் கேட்டார். இதனால், ஆத்திரமடைந்த அந்த கும்பல், யஷ்வந்தை கொடூரமாக தாக்கியது.இதை அறிந்த, பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதை பார்த்ததும், தாக்குதலில் ஈடுபட்ட கும்பல் தப்பி ஓடியது. காயம் அடைந்த மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதுகுறித்து, பள்ளி நிர்வாகம் தரப்பில் ஹூலியாரு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக மஹ்பூப் ஷெரீப், ஷம்சுதீன், இர்பான், முபாரக், முதாசிர், யாசின், தாஜிம் உள்ளிட்டோரில் ஐந்து இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். இருவரை தேடி வருகின்றனர்.
23-Feb-2025