வீட்டு கூரை இடிந்து ஐந்து பேர் காயம்
புதுடில்லி: வீட்டின் கூரை இடிந்து விழுந்து காயம் அடைந்த ஐந்து பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். வடகிழக்கு டில்லி ஜ்வாலா நகரில், நான்கு மாடிகள் கொண்ட வீட்டில், மூன்றாவது மாடியில் புதிதாக கட்டப்படும் கட்டிடத்தின் கூரை நேற்று காலை, 9:50 மணிக்கு இடிந்து விழுந்தது. தகவல் அறிந்து, ஐந்து வண்டிகளில் தீயணைப்புப் படையினர் மற்றும் போலீசார் வந்தனர். இடிபாடுகளை அகற்றினர். அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த இருவர், கட்டட கான்ட்ராக்டர் மற்றும் இரண்டு தொழிலாளர்கள் காயம் அடைந்தனர். காயம் அடைந்த ஐந்து பேரும் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளனர். விசாரணை நடக்கிறது.