வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பயணிகள் பாத்திரம் அல்லது பயணிகள் பாதுகாப்பாக உள்ளனர் எனவும் பயணிகள் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளித்த ஏர் இந்திய நிறுவனத்திற்கு பாராட்டுக்கள் என வெளியிடலாம்.
சென்னை: சென்னையிலிருந்து, அந்தமான் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், அங்கு நிலவிய மோசமான வானிலையால், தரையிறங்க முடியாமல் சென்னை திரும்பி வந்தது.சென்னையில் இருந்து அந்தமான் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 174 பயணிகள் மற்றும் 6 விமான பணியாளர்களுடன் புறப்பட்டது. அந்தமான் சென்றதும் விமானம் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டம் அடித்தது. பயணிகள் அச்சம் அடைந்தனர். அந்தமான் விமான நிலையத்தில் தரைக்காற்று அதிகம் வீசியது. வானிலையும் மோசமாக இருந்தது. அதனால் விமானம் தரையிறங்குவதில் சிரமம் ஏற்பட்டது. இது பற்றி விமானிகள் அறிவித்ததையடுத்து, பயணிகள் ஓரளவு அமைதியானார்கள். சிறிது நேரம் கழித்து விமானம் தரையிறங்க முயன்றும் முடியவில்லை. இதனால் விமானிகள் சென்னை விமான நிலையம் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். விமானத்தை சென்னைக்கு திருப்ப உத்தரவு வந்தது. மோசமான வானிலை காரணமாக சென்னையில் இருந்து அந்தமான் சென்ற விமானம் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கு வந்து சேர்ந்தது. பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு சரியான நேரத்தில் செல்ல முடியாமல் அவதி அடைந்தனர்.
பயணிகள் பாத்திரம் அல்லது பயணிகள் பாதுகாப்பாக உள்ளனர் எனவும் பயணிகள் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளித்த ஏர் இந்திய நிறுவனத்திற்கு பாராட்டுக்கள் என வெளியிடலாம்.