உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சரயு நதியில் மிதக்கும் உணவகம்

சரயு நதியில் மிதக்கும் உணவகம்

அயோத்தி: அயோத்தியில் உள்ள சரயு நதியில் மிதக்கும் உணவகம் ஒன்றை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச அரசின் சூழல் சுற்றுலாவை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இது தொடங்கப்பட உள்ளது. அயோத்தியில் ஒரு புதிய சுற்றுலா தலத்தைத் தொடங்குகின்ற வகையில் சரயு நதியில் மிதக்கும் உணவகம், உத்தரபிரதேச சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தால் உருவாக்கப்பட்ட இந்தத் திட்டம் நிறைவடையும் தருவாயில் உள்ளது. சர்வதேச உணவு அனுபவத்தை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட இந்த உணவகம், டிசம்பர் 2023ல் பிரயாக்ராஜில் தொடங்கப்பட்ட 'காளிந்தி' உணவகத்தைப் போலவே, அயோத்தியின் உலகளாவிய ஈர்ப்பை உயர்த்துவதற்கான மாநிலத்தின் பரந்த சுற்றுச்சூழல் சுற்றுலா மற்றும் கலாச்சார மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.இந்த மிதக்க இதன் மூலம், மாநிலத்தில் பொறுப்பான மற்றும் அனுபவப்பூர்வமான சுற்றுலாவை வளர்க்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை