உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சினிமா நடிகர்களை பின்தொடர்வதால் பொருளாதாரம் உயராது; நிடி ஆயோக் முன்னாள் தலைவர் அமிதாப் காந்த்

சினிமா நடிகர்களை பின்தொடர்வதால் பொருளாதாரம் உயராது; நிடி ஆயோக் முன்னாள் தலைவர் அமிதாப் காந்த்

புதுடில்லி: ''பொழுதுபோக்கு மூலமாகவோ, அல்லது சினிமா நட்சத்திரங்களின் கருத்துக்களை பின்தொடர்வதாலோ, இந்தியப் பொருளாதாரம் உயராது. கடின உழைப்பால் மட்டுமே உயரும்,'' என்று நிடி ஆயோக் முன்னாள் தலைவர் அமிதாப் காந்த் தெரிவித்தார். நிடி ஆயோக் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியும், ஜி20 ஷெர்பாவுமான அமிதாப் காந்த், டில்லியில் நடந்த மாநாட்டில் பேசியதாவது:ஜப்பான், தென் கொரியா மற்றும் சீனா ஆகிய நாடுகள், வலுவான பணி நெறிமுறைகள் மூலம் பொருளாதார வெற்றியை அடைந்துள்ளன.கடின உழைப்பில் எனக்கு நம்பிக்கை உள்ளது. 80 மணி நேரமாக இருந்தாலும் சரி அல்லது 90 மணி நேரமாக இருந்தாலும் சரி, இந்தியர்கள் கடினமாக உழைக்க வேண்டும். உங்கள் லட்சியம், 4 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தில் இருந்து 30 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர வேண்டுமெனில், வெறும் பொழுதுபோக்கு மூலமாக அதை அடைந்து விட முடியாது; சினிமா நட்சத்திரங்களின்கருத்துக்களை பின் தொடர்வதாலும் முடியாது. கடின உழைப்பால் மட்டுமே முடியும்.இப்போது கடின உழைப்பின்றி இருப்பதை பற்றி பேசுவது பேஷன் ஆகி விட்டது. ஏன்?காலம் கடத்தாமல், செலவும் அதிகரிக்காத வகையில், உலகத்தரத்தோடு திட்டங்களை குறித்த காலத்தில் நிறைவேற்ற கடினமாக உழைக்க வேண்டும். கடினமாக உழைக்காமலேயே இந்தியா சிறந்த நாடாக முடியும் என்று இளம் தலைமுறையினருக்கு தவறான செய்தியை சொல்கிறோம். அது நடக்காது. எந்த ஒரு நாடும், கடினமாக உழைக்காமல் சிறந்த நாடாக முடியாது.இவ்வாறு அமிதாப் காந்த் கூறினார்.கடந்த சில மாதங்களுக்கு முன், இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயணமூர்த்தி, வாரம் 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.அவரை தொடர்ந்து, எல் அண்ட் டி நிறுவன சேர்மன் சுப்பிரமணியம், 'வாரம் 90 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும். எவ்வளவு நேரம் தான் வீட்டில் மனைவியை பார்த்துக் கொண்டிருப்பீர்கள்' என்று கூறினார்.நாராயணமூர்த்தி, சுப்பிரமணியம் இருவரும் கூறியது, இணையத்திலும், பொது வெளியிலும் விவாதங்களை கிளப்பியது. அதன் தொடர்ச்சியாக இப்போது அமிதாப் காந்த், தன் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

JAYACHANDRAN RAMAKRISHNAN
மார் 03, 2025 10:43

மறுபடியும் மறுபடியும் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் மாநில உரிமையில் மத்திய ஒன்றிய அரசும் ஒன்றிய அதிகாரிகள் தலையிடுகிறார்கள். இதை திராவிட மாடல் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாது. இரு மொழி எப்படி எங்கள் மாநில உரிமை என்று திராவிட மாடல் கூறுகிறதோ அதே போல் திராவிட மாடலுக்கு அச்சாணியாக இருப்பது சினிமாவும் அரசியலும். இதை எங்கள் திராவிட மாடல் அது திமுகவாக இருந்தாலும் அதிமுகவாக இருந்தாலும் நாங்கள் விட்டு கொடுக்க மாட்டோம். சினிமாவே எங்கள் மூச்சு பேச்சு. ஆகவே எங்கள் மாநில உரிமையில் யாரும் தலையிட கூடாது. என்ன Bro உங்களுக்கு இது உங்களுக்கு நல்லா இருக்கா Bro இப்படி எல்லாம் நல்ல கருத்தை சொன்னால் எப்படி Bro போங்க Bro உங்க கூட நாங்க டூ இனிமேல் எங்க மந்திரிங்க எல்லாம் கலை கூத்தாடி செய்துட்டு Part-time ஆக தான் Bro மந்திரி வேலை பார்க்கிறதா இருக்கோம்


ராமகிருஷ்ணன்
மார் 03, 2025 09:01

வெளிநாட்டு தமிழர்கள், இந்தியர்கள், தமிழ், இந்திய திரைப்படங்களை பார்த்து, இந்திய நாகரீகம் இவ்வளவு தானா என்று நினைக்கிறார்கள். சினிமா துறையில் உள்ள ஒரு சிறு கூட்டம் நாட்டின் நாகரீகத்தை தவறாக புரிந்து கொள்ள துணை புரிகிறது. இவையெல்லாம் மாற வேண்டும்.


Ram pollachi
மார் 02, 2025 23:43

ஒரே நாளில் கொரோனா வைரஸ் பரப்பிய சீனாவின் உழைப்பு உலக பிரசித்தி!


Bye Pass
மார் 02, 2025 22:17

சீனாவில் சீனர்களின் ஒரு வார உழைப்பை அமெரிக்க மக்களின் ஒரு வருட உழைப்போடு ஒப்பிட்டு பேசுவது சாதாரண விஷயம் ...எந்த குறிப்பிட்ட இலக்கையும் அடையாமல் சீனர்கள் ஓய்வெடுப்பதில்லை என்றும் சொல்வதுண்டு


Seekayyes
மார் 02, 2025 21:54

சினிமாகாரர்கள்,கிரிகெட் வீரர்கள் மட்டும் அல்லாது, ஓழுக்கமற்ற நடவடிக்கை, உழைத்து உயர வேண்டும் என்று எண்ணாது,குறுக்கு வழியில் எப்படியாவது சம்பாதிக்க வேண்டும் என்ற மனோபாவம், சுய கெளரவம் இல்லாமல் தனிமனித ஒழுக்கமற்ற வாழ்கை இதெல்லாம் காரணமே. இதெல்லாம் ஒவ்வொரு இந்தியர்களிடம் இருந்து விட்டால் அரசியல் வியாதிகளுக்கு இங்கு வேலையே இல்லை.


M Ramachandran
மார் 02, 2025 21:52

சுய சிந்தனையற்ற மூட மக்கள் இருக்கும் வரை சினிமா காரன்களின் காட்டில் மழை.


J.Isaac
மார் 02, 2025 21:51

ஆண்டாண்டுகாலமாக இந்தியாவின் சமுதாய சீரழிவிற்கு முக்கிய காரணம் சினிமா என்பதை யாராலும் மறுக்க முடியாது


Dhasarathan
மார் 02, 2025 23:06

இதை சொன்னால் நம்மை ஏளனமாக பார்கிரார்கள்..


veeramani hariharan
மார் 02, 2025 21:20

Rightly said. Unfortunately T.N is very bad and most of the youngsters are worshipping Cine actors


J.Isaac
மார் 02, 2025 21:05

ஆண்டாண்டுகாலமாக நம் நாட்டு இளைஞர்கள் நாகரீகம் என்றுசொல்லி மது, மாது,சூது, புகபுகை


m.arunachalam
மார் 02, 2025 21:03

இதில் கிரிக்கெட்டையும் சேர்த்துக்கொள்ளலாம் . கேளிக்கைகளில் மட்டும் ஈடுபாடு உள்ள சமுதாயத்தை உருவாக்கி விட்டோம் . Sari செய்ய முடியுமா ? பெற்றோர் ,ஆசிரியர்கள் மற்றும் ஜாதி மத தலைவர்களும் புரிந்து செயல் பட்டால் வாய்ப்புள்ளது .


முக்கிய வீடியோ