உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்துாரை தொடர்ந்து போபால் நகரிலும் பிச்சை எடுக்க தடை

இந்துாரை தொடர்ந்து போபால் நகரிலும் பிச்சை எடுக்க தடை

போபால்: மத்திய பிரதேச மாநிலம் இந்தூருக்குப் பிறகு, போபால் நகரிலும் பிச்சை எடுப்பது, பிச்சை வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளது.மத்தியப் பிரதேச முதல்வர் டாக்டர் மோகன் யாதவ் சமீபத்தில் முழு மாநிலத்தையும் பிச்சைக்காரர்கள் இல்லாத மாநிலமாக மாற்றுவோம், வறுமையை ஒழிக்க அனைத்து வழிகளையும் முயற்சிப்போம் என்று கூறியிருந்தார்.அதன் தொடர்ச்சியாக, இந்துார் நகரில் பிச்சை எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்போது போபால் நகரிலும் இதேபோன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போபால் கலெக்டர் கௌஷலேந்திர விக்ரம் சிங் உத்தரவில் குறிப்பிட்டுள்ளதாவது:போபால் மாவட்டத்திற்குள் எந்த வகையான பிச்சை எடுப்பதும் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. பிச்சை எடுப்பது ஒரு சமூக அச்சுறுத்தல். போபால் மாவட்டத்தில், பிற மாநிலங்கள் மற்றும் நகரங்களைச் சேர்ந்தவர்களும் இந்த வகையான பிச்சை எடுப்பதில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் பலர் குற்றப்பின்னணி கொண்டவர்கள்.போக்குவரத்து சிக்னல்களில் பிச்சை எடுப்பதால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பிச்சை எடுப்பது மற்றும் கொடுப்பது முற்றிலும் தடை செய்யப்படுகிறது. இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

m.arunachalam
பிப் 04, 2025 23:37

நல்ல செயல் . தொழிலாளர் பற்றாக்குறை குறையும் . நகரத்தில் கூட்டத்தை கொஞ்சம் குறைக்கலாம் . சுகாதார நன்மைகளும் உண்டு .


தத்வமசி
பிப் 04, 2025 22:13

பிச்சை எடுத்து வருமான வரி கட்டுவோர் வாழும் நாடு இது. இதில் பிச்சை என்பது ஒரு தொழில். அதற்கு கூச்சப் படாதவர்கள் அதிகம் உள்ளனர். ஓட்டு போட பிச்சை கொடுப்பவர்கள், ஒட்டு போட பணம் வாங்கும் பிச்சைக்காரர்கள் நிறைந்த நாடு.


Siva Subramaniam
பிப் 04, 2025 21:56

தமிழ் நாட்டில் தடை செய்ய முடியாது, அதுவும் தேர்தல் சமயத்தில்.


ஆரூர் ரங்
பிப் 04, 2025 21:55

பிச்சை போடுவதையே தடை செய்தால் ஆர்எஸ்பி என்னதான் செய்வார்? பொழப்புல மண்ணள்ளிப் போடுறீங்களே.


புதிய வீடியோ