உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உணவு தரத்தை பரிசோதிக்க புட் டெஸ்டிங் சென்டர்கள்

உணவு தரத்தை பரிசோதிக்க புட் டெஸ்டிங் சென்டர்கள்

பெங்களூரு: உணவுப்பொருட்களின் தரத்தை பரிசோதிக்கும் பரிசோதனை மையத்தை, சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் திறந்துவைத்தார்.பெங்களூரின், மால் ஆப் ஏஷியாவில், புட் டெஸ்டிங் சென்டரை திறந்துவைத்து, அமைச்சர் தினேஷ் குண்டுராவ் பேசியதாவது:உணவு பாதுகாப்பு மற்றும் தரம் குறித்து, பொதுமக்களே இந்த சென்டருக்கு வந்து, பரிசோதித்து கொள்ளலாம். இங்கு பரிசோதனைக்கு வருவோருக்கு, தேவையான தகவல்களை சென்டரின் அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும்.முதற்கட்டமாக பெங்களூரின் 10 மால்களில், உணவு மற்றும் தரக்கட்டுப்பாட்டு துறை சார்பில் 'புட் டெஸ்டிங் சென்டர்' திறக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், தாங்கள் தினமும் பயன்படுத்தும் பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய், டீ பொடி, உப்பு, பால், நெய், பன்னீர், வெண்ணெய், காய்கறிகள், உணவு தானியங்கள், கொத்துமல்லி பொடி, குடிநீர் உட்பட அனைத்து பொருட்களின் தரத்தை பரிசோதிக்கலாம்.பெங்களூரின் காய்கறிகள், உணவு தானியங்களை விற்பனை செய்யும், ரிலையன்ஸ் பிரஷ் உட்பட, சூப்பர் மார்க்கெட்களிலும், புட் டெஸ்டிங் கிட்கள் பொருத்தும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.உணவு தரம் விஷயத்தில், சமீபத்தில் பல விதமான கடும் நடவடிக்கை எடுத்துள்ளோம். உணவுப் பொருட்கள் தயாரிப்போருக்கு தொல்லை தரும் நோக்கம், அரசுக்கு இல்லை.மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே, முக்கிய நோக்கம். சுகாதாரமான உணவு உட்கொண்டால், மக்கள் தங்கள் ஆரோக்கியத்தை காப்பாற்றிக் கொள்ளலாம். தரமற்ற உணவை கட்டுப்படுத்துவதில், அரசுடன் கைகோர்க்க வேண்டும்.திருப்பதி லட்டில், தரமற்ற நெய் பயன்படுத்தியதால், நெய்யின் தரம் குறித்து மக்களுக்கு பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. கர்நாடகாவில் பதஞ்சலி உட்பட 230 விதமான நெய்கள் பரிசோதிக்கப்பட்டன. எதிலும் அபாயமான அம்சம் தென்படவில்லை. எனவே மக்கள் பயப்பட தேவையில்லை.துமகூரு சாலையின் வைஷ்ணவி சபையர் சென்டர், தனிசந்திராவின் எலிமென்ட்ஸ் மால், பாரதிய மால் ஆப் பெங்களூரு, பல்லாரி சாலையின் பீனிக்ஸ் மால் ஆப் ஏஷியா, சர்ச் தெருவின் ஷோபா மால், பன்னரகட்டா சாலையின் மீனாட்சி மால், பெல்லந்தூரின் சென்ட்ரல் மால், பென்னிகானஹள்ளியின் கோபாலன் மால், கோரமங்களாவின் போரம் மால், மாகடி சாலையில் உள்ள ஜிடி ஒர்ல்டு மாலில் புட் டெஸ்டிங் சென்டர் அமைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை