உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆர்.எஸ்.எஸ்.,சில் இணைந்தார் கேரள மாஜி டி.ஜி.பி., தாமஸ்..

ஆர்.எஸ்.எஸ்.,சில் இணைந்தார் கேரள மாஜி டி.ஜி.பி., தாமஸ்..

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கொச்சி: கேரள முன்னாள் டி.ஜி.பி., ஜேக்கப் தாமஸ், 65, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் நேற்று முறைப்படி இணைந்தார். ஆர்.எஸ்.எஸ்., எனப்படும் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கத்தின் நுாற்றாண்டு மற்றும் விஜயதசமி விழா நாடு முழுதும் நடக்கின்றன. அந்த வகையில், கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கொச்சியில் நேற்று நடந்த விழாவில், மாநில முன்னாள் டி.ஜி.பி., ஜேக்கப் தாமஸ், ஆர்.எஸ்.எஸ்.,சில் முறைப்படி சேர்ந்தார். ஆர்.எஸ்.எஸ்., சீருடை அணிந்து வந்த அவர், விழாவுக்கு தலைமை தாங்கினார். இது குறித்து, முன்னாள் டி.ஜி.பி., ஜேக்கப் தாமஸ் கூறியதாவது: கேரள மக்கள் ஆர்.எஸ்.எஸ்-., அமைப்புக்கு எதிரானவர்கள் அல்ல. கலாசார வலிமை கொண்ட நபர்களை உருவாக்குவதே ஆர்.எஸ்.எஸ்.,சின் நோக்கம். இத்தகைய நபர்கள் அதிகமிருந்தால், சமூகம் வலுவடையும். அது தேசத்தை வலுப்படுத்த உதவும். தனிநபர் மூலம் வலுவான தேசத்தை உருவாக்க ஆர்.எஸ்.எஸ்., விரும்புகிறது; நாட்டை ஒன்றிணைக்கும் சக்தியாகவும் ஆர்.எஸ்.எஸ்., விளங்குகிறது. ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்கு ஜாதி, மதம், மொழி என்ற வேறுபாடுகள் இல்லை. நான் கிறிஸ்துவ மதத்தை பின்பற்றுகிறேன். பள்ளி, கல்லுாரி படிப்பை கிறிஸ்துவ கல்வி நிறுவனத்தில் முடித்தேன். தற்போது, ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு விழாவுக்கு தலைமை வகிக்கிறேன் என்பதை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். கேரளாவில் உள்ள விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவின் இயக்குநராகவும் பணியாற்றிய ஜேக்கப் தாமஸ், ஓய்வுக்கு பின், 2021ல் பா.ஜ.,வில் சேர்ந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

V Venkatachalam
அக் 03, 2025 14:07

அற்புதமான செய்தி. தினமலருக்கு வாழ்த்துக்கள்.


V Venkatachalam
அக் 03, 2025 14:06

கிராண்ட் வெல்கம் தாமஸ் அவர்களே. உங்களுடைய ஆப்ஸர்வேஷன் எல்லா மக்களிடமும் சென்று சேரட்டும். தேசத்தின் வலிமை நாட்டு மக்களின் பாதுகாப்பு. உங்கள் வருகை ஆர் எஸ் எஸ் ஐ மேலும் சிறப்படைய செய்யட்டும்.


Madras Madra
அக் 03, 2025 13:43

RSS ல் யார் வேண்டுமானாலும் சேரலாம் ஆனால் தொடர்ந்து சேவை ஆற்ற தியாக மனம் வேண்டும் தாமஸ் அவர்களுக்கு அது இருக்கிறது வாழ்த்துக்கள்


Rajah
அக் 03, 2025 08:14

வாழ்த்துக்கள். கேரளாவில் கிறிஸ்தவர்கள் பாஜகவை ஆதரிக்கின்றார்கள். அவர்கள் தயவுடன்தான் சுரேஷ் கோபி எம்பி ஆனார்.பாஜக அவர்கள் மதத்திற்கு தடையாக இருக்காது என்பதை முழுமையாக நம்புகின்றார்கள். தமிழ் நாடு வாழ் கிறிஸ்தவர்களும் கேரளா மக்களை பின் பற்றி நாட்டின் வளர்ச்சிக்கு உதவுங்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை