உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புகழ்பெற்ற குக்கே சுப்ரமண்யர் கோவில் வாரிய தலைவராக மாஜி ரவுடி நியமனம்

புகழ்பெற்ற குக்கே சுப்ரமண்யர் கோவில் வாரிய தலைவராக மாஜி ரவுடி நியமனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தட்சிணகன்னடா: கர்நாடகாவின் பிரசித்தி பெற்ற புண்ணிய தலமாக போற்றப்படும், குக்கே சுப்ரமண்யா கோவிலின் நிர்வாக வாரிய தலைவராக முன்னாள் ரவுடி நியமிக்கப்பட்டுள்ளது, பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடக மாநிலம், தட்சிணகன்னடா மாவட்டத்தில் குக்கே சுப்ரமண்யர் கோவில் உள்ளது. இது வரலாற்று சிறப்புமிக்க புண்ணிய தலமாகும். உள்நாடு மட்டுமின்றி, வெளிநாட்டினரும் இக்கோவிலுக்கு வந்து, தோஷ நிவர்த்தி செய்து கொள்கின்றனர்.கர்நாடகாவில் அதிக வருவாய் உள்ள கோவில்களின் பட்டியலில், குக்கே சுப்ரமண்யர் கோவில் முதல் இடத்தில் உள்ளது.இத்தகைய பெருமை வாய்ந்த கோவிலின், நிர்வாக வாரிய தலைவர் பதவிக்கு முன்னாள் ரவுடி ஹரிஷ் இஞ்சாடியை தேர்வு செய்துள்ளனர். இது பக்தர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. இவரை இப்பதவியில் நியமிக்கும்படி, சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் சிபாரிசு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஹரிஷ் இஞ்சாடி முன்னாள் ரவுடி. சிறைக்கும் சென்று வந்தவர். போலி காசோலை கொடுத்து, பழங்கள், தேங்காய் விற்பனை 'டெண்டர்' எடுத்து, கோவில் நிர்வாகத்தை ஏமாற்றியதாக செய்த குற்றச்சாட்டும் இவர் மீது உள்ளது. இதே வழக்கில் இவர் கைதானார்.அது மட்டுமின்றி, மணல் மாபியா மற்றும் மரக்கடத்தலில், இவருக்கு தொடர்புள்ளதாக குற்றச்சாட்டும் உள்ளது. இப்படிப்பட்டவரை கோவில் நிர்வாக வாரிய தலைவராக நியமித்திருப்பது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.குக்கே சுப்ரமண்யர் கோவில் நிர்வாக தலைவராக, ஹரிஷ் இஞ்சாடியை நியமித்த விஷயத்தில், எனக்கு தொடர்பு இல்லை. அவரது பெயரை அப்பதவிக்கு, நான் சிபாரிசு செய்யவும் இல்லை. தேர்தல் மூலமாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் இவரை நியமித்தது சரியல்ல. இதுகுறித்து, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சருடன் பேசுவேன்.- தினேஷ் குண்டுராவ், அமைச்சர், காங்.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Thiyagarajan S
மே 20, 2025 15:14

அந்த மாநிலத்தில் இது ஒரு செய்தி எங்களுக்கு இது சர்வசாதாரணம்... ஏன்னா நாங்க திராவிட ...


SRIDHAAR.R
மே 15, 2025 21:57

இதில் ஊழலை பற்றி பேசும் காங்கிரஸ்


krishna moorthy
மே 15, 2025 13:03

அரசியல் செல்வாக்கு என்னும் தகுதியை விட வேறு என்ன வெகுமதி வேண்டும் ...! எந்த பதவிக்கும்? காலம் மாறிப் போச்சு ஊரும் மாறிப் போச்சு மக்கள் நாடும் இலவசம் இலவசமாய் கிடைக்கும் வரை!


Yes your honor
மே 15, 2025 10:32

காங்கிரஸாரின் லட்சணமே இதுதான். தாய் நாட்டைப் பற்றியோ அல்லது மக்களைப் பற்றியோ சிறிதும் அக்கறை இல்லாத வெளிநாட்டுக் கூட்டம்.


பாமரன்
மே 15, 2025 10:12

கிரிக்கெட் தெரியாத / விளையாடியிராத ஆளை ஒலக கிரிக்கெட் தலீவரா ஆக்கலையா..


Keshavan.J
மே 16, 2025 10:45

நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. முதலில் இருந்ததே கிரிக்கெட் ஆடாத பலர் போர்டு ப்ரெசிடெண்டாக இருந்துள்ளனர். நீங்கள் அவர்களையும் சேர்த்து கிண்டல் பண்ண வேண்டும். ஆனால் ஒரு கிரிமினல் குற்றவாளி கோயில் ப்ரெசிடெண்ட் ஆவது வேட்க கேடு


RATNAM SRINIVASAN
மே 15, 2025 09:51

இது காங் கோவேர்மண்ட்மென்ட் அப்படித்தான் இருக்கும். ரௌடியைகளுக்குத்தான் பதவி கிடைக்கும் .


GMM
மே 15, 2025 09:47

அர்ச்சகர் தகுதியை மத சார்பற்ற மாநிலம் நிர்ணயிப்பது கடினம். மந்திர ஆகமவிதிப்படி அரசு நீதிபதி சட்டம் அறிவது கடினம். / கொலிஜியம் நீதயரசர் இந்து சமய சடங்கு விசாரணையில் கலந்து கொண்டு குழப்புவது தான் காங்கிரஸ், திமுக கோவில் திருப்பணிக்கு ரவடி, முன்னாள் கைதிகளை நியமிக்க காரணம்? வக்கீல் மனுக்கள் நிர்வாக ஆடிட் செய்தால், வழக்கு செலவுகள், எண்ணிக்கை குறையும். நிர்வாகத்தை முடக்கும் முன் வக்கீல் மீது புகார் கொடுக்க வசதி காலத்தின் கட்டாயம்.


Matt P
மே 15, 2025 09:15

அறநிலைய அமைச்சர் முன்னாள் ரவுடி தானே.


தர்மராஜ் தங்கரத்தினம்
மே 15, 2025 08:45

ஆஹா ...... முகத்துல என்னவொரு ஆன்மிக களை


D Natarajan
மே 15, 2025 08:01

காங்கிரெஸ் ஆட்சியில் இப்படித்தான் நடக்கும் . ஒற்றுமை அவசியம் பாரத் மாதா கி ஜெய்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை