உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ் மருத்துவமனையில் அனுமதி

தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ் மருத்துவமனையில் அனுமதி

ஐதராபாத்: பி.ஆர்.எஸ்., தலைவரும் தெலுங்கானா மாநில முன்னாள் முதல்வருமான சந்திரசேகர் ராவ் 71, இன்று உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை சோமாஜிகுடாவில் உள்ள யசோதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இது தொடர்பாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்ததாவது:சந்திரசேகர் ராவ், சிறுநீரக செயல்பாட்டை மதிப்பிடுவதற்காக கிரியேட்டினின் பரிசோதனைகளுக்காக அழைத்து வரப்பட்டார். கடந்த ஜூலை 3 ஆம் தேதி காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது 2வது முறையாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த நேரத்தில், மருத்துவமனையின் ஒரு அறிக்கையில், முதற்கட்ட விசாரணைகளில் உயர் ரத்த சர்க்கரை மற்றும் குறைந்த சோடியம் அளவுகள் இருப்பது கண்டறியப்பட்டதாக கூறப்பட்டது. சாதாரண வரம்புகளுக்குள் இருந்தன. அவரது ரத்த சர்க்கரையை உறுதிப்படுத்தவும் சோடியம் சமநிலையின்மையை சரிசெய்யவும் சிகிச்சை பெற்ற பிறகு அவர் கடந்த ஜூலை 5 ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தற்போது மருத்துவ அறிக்கை வந்தபிறகு விரிவாக தெரியும்.இவ்வாறு மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை