வாசகர்கள் கருத்துகள் ( 2 )
விபத்துக்கள், மரணம், பாலியல் வன்கொடுமை, ஊழல், போதைப்பொருள் கடத்தல் செய்திகள் இல்லாமல் ஒரு நாலாவது பொழுது விடியுமா?
அதற்கு நீங்கள் இருக்க வேண்டிய இடம் பூமியில் இல்லை வேற்று கிரகத்தில் தான்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் குழாய் பதிக்கும் பணியின் போது மண் சரிந்து விழுந்ததில் தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் மாயமான 5 பேரை தேடும் பணி நடந்து வருகிறது.ராஜஸ்தான் மாநிலம், பரத்பூரில் குழாய் பதிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். சில தொழிலாளர்கள் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட 10 அடி ஆழ பள்ளத்தை நிரப்பிக் கொண்டிருந்தபோது, மண் சரிந்து விழுந்ததில் சிக்கி கொண்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர். இந்த விபத்தில் தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்தனர். தொழிலாளர்கள் 6 பேர் லேசான காயத்துடன் மீட்கப்பட்டு உள்ளனர். மேலும் 5 பேர் மாயம் ஆகி உள்ளனர். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. மாவட்ட கலெக்டர், எஸ்.பி., உள்ளிட்ட உயர் அதிகாரிகள், சம்பவ இடத்தில் முகாமிட்டு மீட்பு பணிகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர்.மண் சரிந்து விழுந்ததில் தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விபத்துக்கள், மரணம், பாலியல் வன்கொடுமை, ஊழல், போதைப்பொருள் கடத்தல் செய்திகள் இல்லாமல் ஒரு நாலாவது பொழுது விடியுமா?
அதற்கு நீங்கள் இருக்க வேண்டிய இடம் பூமியில் இல்லை வேற்று கிரகத்தில் தான்