உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரபல தொழிலதிபரை ஏமாற்றி ரூ.7 கோடி பறித்த மோசடி கும்பல்

பிரபல தொழிலதிபரை ஏமாற்றி ரூ.7 கோடி பறித்த மோசடி கும்பல்

லுாதியானா, பஞ்சாபைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் எஸ்.பி.ஓஸ்வாலை ஏமாற்றி, 7 கோடி ரூபாய் பறித்த மோசடி கும்பலை சேர்ந்த இருவரை போலீசார் நேற்று கைது செய்தனர். நாட்டில் ஜவுளி துறையில் சிறந்து விளங்கும் நிறுவனங்களில் ஒன்று வர்தமான் குழுமம். பஞ்சாபில் உள்ள லுாதியானாவை தலைமையிடமாக வைத்து செயல்படும் இந்த நிறுவனத்தின் தலைவராக ஸ்ரீ பால் ஓஸ்வால் உள்ளார். கோடீஸ்வரான இவருக்கு சமீபத்தில் மொபைல் போனில் அழைப்பு ஒன்று வந்தது. சி.பி.ஐ., அதிகாரிகளாக தங்களை அறிமுகப்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள், எஸ்.பி.ஓஸ்வால் பெயரில் சர்வதேச அளவில் மோசடி நடந்துள்ளதாக கூறினர்; 'ஆன்லைன்' வாயிலாக அவரை கைது செய்ய உள்ளதாகவும் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான வழக்கை ரத்து செய்வதாகக் கூறி, ஓஸ்வாலிடம் 7 கோடி ரூபாய் வரை அவர்கள் பணம் பறித்தனர். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், பஞ்சாப் சைபர்கிரைம் போலீசில் புகாரளித்தார். விசாரணையில், ஒன்பது பேர் அடங்கிய கும்பல் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து, அசாமின் குவஹாத்தியைச் சேர்ந்த அட்டானு சவுத்ரி, ஆனந்தகுமார் சவுத்ரி ஆகியோரை நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5.25 கோடி ரூபாய் மீட்கப்பட்டது. மோசடியில் ஈடுபட்டு தப்பியோடிய அசாம் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஏழு பேரை, போலீசார் தேடி வருகின்றனர்.

26 பேரை கைது செய்தது சி.பி.ஐ.,

'சைபர்' குற்றங்கள் அதிகரித்து வருவதை அடுத்து, 'ஆப்பரேஷன் சக்ரா - 3' என்ற பெயரில் மஹாராஷ்டிரா, தெலுங்கானா, ஆந்திர மாநிலங்களில் உள்ள 32 இடங்களில், சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதில், 58.45 கோடி ரூபாய், லாக்கர் சாவிகள், மூன்று சொகுசு கார்கள், டிஜிட்டல் ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சோதனையின் போது, மூன்று மாநிலங்களில் உள்ள நான்கு கால் சென்டர்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இங்கு, சட்டவிரோதமாக பல்வேறு சைபர் குற்றங்கள் மேற்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அங்கு பணியாற்றிய 170 பேரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி, 26 பேரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ