உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சி.பி.ஐ., என மிரட்டி விஞ்ஞானியிடம் ரூ.1.29 கோடி மோசடி செய்த கும்பல் கைது

சி.பி.ஐ., என மிரட்டி விஞ்ஞானியிடம் ரூ.1.29 கோடி மோசடி செய்த கும்பல் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: ஓய்வு பெற்ற விஞ்ஞானியிடம், சி.பி.ஐ., எனக்கூறி மோசடி ரூ.1.29 கோடி மோசடி செய்த கும்பலை உ.பி., போலீசார் கைது செய்தனர்.கால்நடை ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானியாக பணிபுரிந்தவர் சுக்தேவ் நந்தி. இவரை தொடர்பு கொண்ட மர்ம கும்பல், தங்களை சி.பி.ஐ., எனக்கூறி அறிமுகம் செய்து கொண்டனர். பிறகு அவரை டிஜிட்டல் அரெஸ்ட் செய்வதாக கூறி, மிரட்டி 3 நாட்கள் வீட்டிற்குள்ளேயே அடைத்து வைத்தனர். அவர்களை மிரட்டி ரூ.1.29 கோடி மோசடி செய்துள்ளனர்.பணத்தை இழந்த பிறகு தான், ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சுக்தேவ் நந்தி, சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ஷியாம், சுதீர், ரஜ்னீஸ் மற்றும் மகேந்திரா ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

venugopal s
ஜூலை 06, 2025 11:59

இந்த மூஞ்சிகளைப் பார்த்து சி பி ஐ அதிகாரிகள் என்று நம்பிய அந்த விஞ்ஞானியே போலி விஞ்ஞானியாக இருப்பார் என்று தோன்றுகிறது!


பெரிய ராசு
ஜூலை 06, 2025 09:54

சுக்தேவ் நந்தினு பெயருக்கு பதிலாக சுக்தேவ் தத்தி அப்படினு கூப்பிடுங்க இவனெல்லாம் எண்ணத்தையே ஆராய்ச்சி பண்ணி கிழிச்சனையோ


அப்பாவி
ஜூலை 06, 2025 09:36

அந்த ஊர் சமச்சீர் கல்வி படிச்சி விஞ்ஞானி ஆயிருப்பாரோ?


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூலை 06, 2025 08:59

சி பி ஐ என்றால் விஞ்ஞானி ஏன் பயப்பட வேண்டும் ?? பத்து ரூபாய் என்றாலும் பார்த்துப் பார்த்து செலவு செய்கிறோம் ... முள்ளங்கி பத்தையாக இப்படி இழந்துள்ளாரே ??


அப்பாவி
ஜூலை 06, 2025 08:16

இன்னிக்கி கைது செய்து ரெண்டுநாளில் உட்டுருவாங்க. அவிங்க மூஞ்சில திருடன்னு பச்சை குத்தி வெளியே அனுப்புங்க.


சிட்டுக்குருவி
ஜூலை 05, 2025 23:48

நந்தி இவ்வளவு படித்தும் தத்தியாக இருக்ககூடாது .சிபிஐ என்றால் இருப்பா நான் லோக்கல் போலிஸுக்கு போன் செய்து உறுதி செய்துகொள்கின்றேன் என்று கூறி போன் செய்திருக்கவேண்டும் .ஓடிப்போய் இருப்பார்கள் .


சமீபத்திய செய்தி