வாசகர்கள் கருத்துகள் ( 1 )
What is the Prosiger
புதுடில்லி, ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டம் இனி, 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கிடைக்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. நேற்று இந்த திட்டத்தை துவக்கி வைத்த பிரதமர் மோடி, ''மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தை, அரசியல் விருப்பு வெறுப்பு காரணமாக டில்லி மற்றும் மேற்கு வங்க அரசுகள் அமல்படுத்தவில்லை. ''இதனால், அப்பகுதியில் வாழும், 70 வயதுக்கு மேற்பட்டோர் இலவச மருத்துவம் பெற முடியாதது மிகுந்த மன வேதனையை அளிக்கிறது,'' என்றார்.நாட்டில் உள்ள ஏழை எளிய மக்கள் இலவச மருத்துவ சிகிச்சை பெறுவதற்கான ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தை, 2018ல் மத்திய அரசு துவங்கியது. 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொடர்ச்சி 11ம் பக்கம்
What is the Prosiger