உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கல்வியாளர்கள் முதல் டாக்டர்கள் வரை: வேட்பாளர்களாக களமிறக்கினார் பிரசாந்த் கிஷோர்

கல்வியாளர்கள் முதல் டாக்டர்கள் வரை: வேட்பாளர்களாக களமிறக்கினார் பிரசாந்த் கிஷோர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: முன்னாள் துணைவேந்தர், டாக்டர்கள், வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்களை வேட்பாளராக ஜன்சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர் களமிறக்கியுள்ளார்.பீஹார் சட்டசபைக்கு நவ., 6 மற்றும் 11ல் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. ஓட்டுகள் 14ம் தேதி எண்ணப்படுகின்றன. தேர்தல் பணிகளில் ஒவ்வொரு கட்சிகளும் ஈடுபட்டுள்ளன.இந்த சட்டசபை தேர்தலில் முதல்முறையாக களமிறங்கும் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஜன்சுராஜ் கட்சி முதலாவது நபராக வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது.மொத்தம் 243 தொகுதிகள் உள்ள நிலையில் முதற்கட்டமாக 51 தொகுதிகளுக்கு வேட்பாளரை பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார்.அவர்களில் பெரும்பாலானோர் முன்னாள் துணைவேந்தர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி, வழக்கறிஞர், நடிகர்கள், டாக்டர் இடம்பெற்றுள்ளனர்.பாட்னா பல்கலை துணைவேந்தர் மற்றும் நாலந்தா திறந்தவெளி முன்னாள் துணைவேந்தர் கேசி சின்ஹா, ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஆர்கே மிஸ்ரா, மூத்த வழக்கறிஞர் ஒய்வி கிரி, போஜ்புரி நடிகர் ரிதேஷ் பாண்டே மற்றும் டாக்டர்கள் உள்ளிட்ட பலர் களமிறக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

தத்வமசி
அக் 09, 2025 21:29

நீங்க என்னவேனா பண்ணுங்க சாமி. ஆனால் படித்தவனுக்கு எவனும் இந்தியாவில் ஓட்டு போட மாட்டான்.உமக்கே இது நன்றாக தெரியும்.இப்படியா மற்றவர்களுக்கு அறிவுரை வழங்கி அவர்களை தேர்தலில் வெற்றி பெற செய்தாய் ?


Nathansamwi
அக் 09, 2025 21:07

வாழ்த்துக்கள் பிரஷாந்த் கிஷோர் ...15 ஆண்டு கால நிதிஷ் ,NDA ஆட்சிக்கு முற்றுபுள்ளி வைக்கவும் ....


Anbuselvan
அக் 09, 2025 20:35

ஒரு மூன்றாம் பாலினத்தவரும் வேட்பாளாராக இறக்கப் பட்டுள்ளார்.


Kulandai kannan
அக் 09, 2025 20:13

ம.நீ.மவும் ஆரம்பத்தில் இப்படித்தான்.


T.sthivinayagam
அக் 09, 2025 20:00

விஜயை மேட்டர் ஆக்கிட்டாச்சு.


Balasubramanian
அக் 09, 2025 19:52

இதைவிட அதிக நாடகம் ஆடினார் கேஜ்ரிவால் கடைசியில் ஊழல் சக்ரவர்த்தியாக மாறினார்! எல்லாம் நவம்பர் 14 ஆம் தேதி தெரிந்து விடும்!


MARUTHU PANDIAR
அக் 09, 2025 19:02

இந்த ஆளால் அவுங்களுக்கும் அவமானம்.


Modisha
அக் 09, 2025 18:53

தேர்தல் கள அறிவு நிறைய என்று மார் தட்டிக்கொள்ளும் இவருக்கு இந்திய வாக்காளர்கள் மன நிலை தெரியவில்லை. இங்கே தேர்தலில் படித்தவர்கள் தோல்வி தான் அடைவார்கள் .


GOPAL
அக் 09, 2025 18:47

ஒஹ்ஹஹ் ..... சந்தோசம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை