உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேர்தலில் போட்டியிடும் தகுதி வயதை 21 ஆக குறைக்க வேண்டும்: தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி

தேர்தலில் போட்டியிடும் தகுதி வயதை 21 ஆக குறைக்க வேண்டும்: தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஹைதராபாத்; தேர்தல்களில் போட்டியிடும் வயதை 25ல் இருந்து 21 ஆக குறைக்க வேண்டும் என்று தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறி உள்ளார்.ஓஸ்மானியா பல்கலைக்கழகத்தில் புதியதாக கட்டப்பட்ட விடுதிகள் திறப்பு விழா மற்றும் புதிய கட்டுமான பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசியதாவது; 21 வயதில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளாக ஆகி விடுகின்றனர். மாவட்டங்களில் அதிகாரிகளாகவும் பணியாற்றுகின்றனர். 21 வயதை பூர்த்தி அடைந்தவர்களுக்கு ஓட்டுரிமையை அளிக்கும் வகையில் அரசியலைமைப்புச் சட்டத்தை தந்தவர் அம்பேத்கர். ஓட்டு போடுபவர்களுக்கான தகுதி உடைய வயது 21 என்பதை முன்னாள் பிரதமர் ராஜிவ் குறைத்தார். ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் 21 வயதில் பணியில் சேருகின்றனர்.அப்படி இருக்கும் போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டியவர்களின் வயது 21 ஆக ஏன் இருக்க முடியாது? இளைய தலைமுறையின் தலைமை இந்த நாட்டுக்கு தேவை.போட்டியிடும் வயதை குறைக்க அரசியலமைப்புச் சட்டத்தையும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தையும் திருத்த வேண்டும். வேட்பாளர்களின் தகுதி வயதைக் குறைத்தால் ஏற்படும் நன்மைகள் குறித்து பார்லிமெண்டில் ஒருமித்த கருத்து உள்ளது.பார்லி. நிலைக்குழுவின் அறிக்கையில் தேர்தலில் போட்டியிடும் குறைந்த பட்ச வயதை 18 ஆக குறைக்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. தெலுங்கானாவில் 21 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் 65 சதவீதம் பேர் உள்ளனர். தெலுங்கானா எம்எல்ஏக்களின் சராசரி வயது 52 முதல் 57 வரை ஆகும். மொத்தமுள்ள 119 எம்எல்ஏக்களில் 6 சதவீதம் பேர் மட்டுமே 25 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள். 50 வயதுக்கு மேற்பட்டவர்களே 60 சதவீதம் பேர் உள்ளனர். 2024ல் 3 பேர் மட்டுமே 25 வயதுடையவர்கள். எனவே தகுதி வயதை 4 ஆண்டுகள் குறைப்பது கூட அவையின் அமைப்பை மாற்றக்கூடும். அனைவருக்கும் தரமான கல்வியை வழங்குதில் தெலுங்கானா அரசு உறுதியாக உள்ளது.இவ்வாறு ரேவந்த் ரெட்டி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Rajan A
ஆக 27, 2025 14:23

இங்கு பிறந்ததில் இருந்தே கட்சி ரத்தம் ஓடுவதாக சொல்லியவரும் இருக்கிறார்கள்


ஆரூர் ரங்
ஆக 27, 2025 12:52

தலீவர் பப்பு போட்டியிடலாமா?


Ravi Kumar
ஆக 27, 2025 12:43

உயர் நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. வாக்காளர் பட்டியல் சரி இல்லைனு நடைபயணம் .


சுந்தரம் விஸ்வநாதன்
ஆக 27, 2025 12:35

பள்ளிக்கல்வி முடிந்து கல்லூரியில் எதோ ஒரு இளங்கலை பட்டம் பெறும்போது வயது 22 ஆகிவிடுகிறது. ஐயா யோசனைப்படி பார்த்தா படிக்காதவங்கதான் நாட்டை ஆளணும்போல இருக்கு


Murugesan
ஆக 27, 2025 12:21

30 வயது ஆக நிர்ணயிக்க வேண்டும், மண்டையில சினிமா பைத்தியகார நாதாரிங்களை நிஜமான ஹீரோவாக நினைக்கின்ற இளைய தலைமுறை சிந்தித்து ஓட்டு போட நல்ல வயது


Rajan A
ஆக 27, 2025 14:26

வேலையில் சேர்ந்து 5 வருடங்கள் ஆகியவர்கள் மட்டுமே தேர்தலில் நிற்க முடியும்னு கொண்டு வரவேண்டும். டெல்லி கத்திக்கு வாய்ப்பே இருக்காது


saravan
ஆக 27, 2025 12:07

15 வயதாக மாற்றானும் எங்க ஊரில் அணில் குஞ்சுகளுடன் ஒரு கட்சி இருக்கிறது அவர்களுக்கு ஆள் வேண்டாமா


தமிழ்வேள்
ஆக 27, 2025 11:26

21 வயது ஓட்டுரிமை என்பதே விளங்காத ஒன்று.. தகுதியற்ற விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு கொடுக்கப்பட்ட ஓட்டுரிமையும், வீட்டு கூரைகள் கொள்ளி யும் ஒன்றே.. ஊரைக் கெடுக்கும் வேலை என்னும்போது 21 வயசுக்கார விடலை எம்எல்ஏ, எம்பி என்றால், கூத்தாடிச்சிகளின் மறைமுக ஆதிக்கத்தில் இவர்கள் இருக்கப் போகிறார்கள் என்று பொருள்.. திராவிட அசிங்கம் தமிழகத்தோடு ஒழிவது நல்லது.. எம்எல்ஏ எம்பி க்கு குறைந்த பட்ச வயது 35 ஆகவும், குறைந்தது பட்டப்படிப்பு, வரி சலுத்துபவர், குறைந்தபட்ச அசையா சொத்தாவது இருக்க வேண்டும் என்று ஒரு கட்டுமானம் விதி அவசியம் தேவை..


Artist
ஆக 27, 2025 11:20

பிரியங்கா பசங்க தேர்தலில் பங்கேற்க பீடிகை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை