உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 6 மாநிலங்களில் 85 லட்சம் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு ஆபத்து: ராகுல்

6 மாநிலங்களில் 85 லட்சம் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு ஆபத்து: ராகுல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' வினாத்தாள் கசிவு காரணமாக ஆறு மாநிலங்களில் உள்ள குழந்தைகள் 85 லட்சம் பேரின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது,'' என லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: 6 மாநிலங்களில் 85 லட்சம் குழந்தைகளின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது. வினாத்தாள் கசிவு என்பது, நமது இளைஞர்களுக்கு பெரும் ஆபத்தான பத்மவியூகமாக மாறி உள்ளது.வினாத்தாள் கசிவு மூலம், கடினமாக உழைக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களை, நிச்சயமற்றதன்மை, அழுத்தம் ஏற்படுவதுடன் உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைப்பதை தடுக்கிறது. கடின உழைப்பை விட நேர்மையற்ற செயலே சிறந்தது என்ற தவறான செய்தியை அடுத்த தலைமுறையினரிடம் எடுத்துச் செல்கிறது. இது முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.நீட் வினாத்தாள் கசிவு, ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கி ஓராண்டு முடியவில்லை. நமது போராட்டத்திற்கு பிறகு, மோடி அரசானது அதற்கு தீர்வு எனக்கூறி ஒரு புதிய சட்டத்தின் பின்னால் ஒளிந்து கொண்டது. ஆனால், சமீபத்திய பல வினாத்தாள் கசிவுகள் அந்தச் சட்டம் தோல்வி அடைந்து விட்டது என்பதை நிரூபித்து உள்ளன.இந்த தீவிரமான பிரச்னை என்பது தோல்வியை காட்டுகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும், அரசுகளும் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒருங்கிணைந்து கடுமையான நடவடிக்கையை எடுக்கும் போது மட்டுமே இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். இந்தத் தேர்வுகளின் கண்ணியத்தைப் பாதுகாப்பது என்பது நமது குழந்தைகளின் உரிமை. அதை எந்த விலை கொடுத்தாவது பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் ராகுல் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 38 )

எவர்கிங்
மார் 14, 2025 09:08

திடீர்னு போதை தெளிஞ்சிடுச்சா?


வாய்மையே வெல்லும்
மார் 14, 2025 09:00

கிறிஸ்டியா பசுந்தோல் போர்த்திய வணிக தீவிரவாதி ஜார்ஜ் சோரோஸ் என்கிற ...பிடிச்சவன் ஆட்டி படைக்கும் ராவுல் என்கிற ஏவல் இருக்கிற வரைக்கும் நாடு முன்னேற்றம் அடைவது கடினமே.


veeramani
மார் 14, 2025 08:59

வெட்டப்பட்ட கை சின்ன கட்சியின் தலைவர் ராகுல் பேசுவதில் அர்தம்மில்லை அரசு அதிகாரத்தில் சில புல்லுருவிகள் எதிர் கட்சிகளின் எலும்பிற்கு ஆசைப்பட்டு இந்த மாதிரி செயல்களை செய்கிறார்கள். ஜனநாயகத்தில் இந்த காரியங்களை சகித்துக்கொள்ள தான் வேண்டும்


Chandradas Appavoo
மார் 13, 2025 22:15

எந்த கசிவு எண்டு சொல்ல வில்லை


வாய்மையே வெல்லும்
மார் 13, 2025 22:12

வந்துட்டானுக ....


Nandakumar Naidu.
மார் 13, 2025 21:31

ராகுல், உம்மாலே நம் தேசத்திற்கும், சமூகத்திற்கும்,100 கோடி இந்துக்களுக்கும் கூடத்தான் ஆபத்து. உம்மை என்ன செய்யலாம்? நீயே சொல்.


இராம தாசன்
மார் 13, 2025 21:25

என்னடா - பாராளுமன்ற கூட்டம் ஆரம்பம் ஆகிவிட்டது இன்னும் பப்பு கூவ காணோமென்னு பார்த்தேன் -இதோ வந்துட்டேன் என்று ஏமாற்றாமல் வந்ததற்கு நன்றி


Murthy
மார் 13, 2025 20:57

நீட் வேண்டுமா ? வேண்டாமா ?? காங்கிரஸ் நிலைப்பாடு என்ன??


Srinivasan Krishnamoorthy
மார் 13, 2025 22:15

neet is implemented based on supreme court directive. even supreme court cannot reverse. so why confusing people


Bala
மார் 13, 2025 20:43

ராகுல் இன்னும் அரசியல்ல தான் இருக்குறீரா ?


தாமரை மலர்கிறது
மார் 13, 2025 20:15

நீயே ஒரு குழந்தை. நீ நல்லா இருக்கும்போது, மற்ற குழந்தைகளின் எதிர்காலத்திற்கு எந்த ஆபத்தும் இல்லை.


சமீபத்திய செய்தி