உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வருங்கால போர் முறைகளை கணிக்க முடியாது: ராஜ்நாத் சிங்

வருங்கால போர் முறைகளை கணிக்க முடியாது: ராஜ்நாத் சிங்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''இனி வரும் காலங்களில் போர் முறைகள் என்பது கணிக்க முடியாதபடியும், ஆக்ரோஷமாகவும் இருக்கும்'', என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.ராணுவ தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பேசியதாவது: இந்திய ராணுவத்தின் நவீன போர் யுத்திகள் குறித்து நாம் பேசும்போது, வரும் நாட்களில், போர் என்பது இன்னும் ஆக்ரோஷமாகவும், கணிக்க முடியாததாகவும் இருக்கும். நவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அதிகரிக்கும் போது, எதிர்காலத்தின் போர் முறைகள் மாறக்கூடும்.இதனால், இந்த பல்முனை சவால்களை எதிர்கொள்ள ராணுவம் தயாராக இருக்க வேண்டும். மேலும், முழுமையான திறன் மேம்பாடு மற்றும் சீர்திருத்தங்கள் இரண்டிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும். இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

அப்பாவி
ஜன 16, 2025 08:26

அப்போ வாங்கிப்போட்ட ரஃபேல், அப்பாச்சி, குப்பாச்சி, எஸ் 400 ஏவுகணை யெல்லாம்.கூடிய சிக்கிரம் காட்சிப் பொருளாயிடும்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 16, 2025 07:56

செய்தியின் இறுதிப் பத்தி கவனம் பெறுகிறது ........ இதுல யாருக்கு பொறுப்பு அதிகம் ராஜ்நாத் ஜி ?? உங்களுக்கா ராணுவத்துக்கா ??


panneer selvam
ஜன 15, 2025 23:01

It is true, now drones are playing very important role in the war . Low cost , very difficult to find out in radar due to low flying , precious targeting and sending a 100 drones is very easy .


ஷாலினி
ஜன 15, 2025 22:26

போரை தடுப்பதற்கு எதுவும் செய்ய முடியாதா


ஆனந்த்
ஜன 15, 2025 22:24

உலகம் எதை நோக்கி செல்கிறது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை